மாணவர் சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளின் குறையை குறிப்பிடுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர், காதுகேளாதவர், வாய்பேச முடியாதவர் என்ற வாக்கியங்களை பயன்படுத்தக் கூடாது எனவும்  பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையின்போது மாற்றுத்திறனாளிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தனிப்பட்ட குறையை சுட்டிக் காட்டி அதன் மூலம் நவீன தீண்டாமையை கடைபிடிப்பதை தடுக்க புதிய சட்டத்திருத்தை தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. பல்கலை, கல்லூரி மாணவர் சேர்க்கையில் தேவையற்ற கேள்விகளை தவிர்க்க பல்கலைக்கழக சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்து நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.