OPS Mother Death: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் காலமானார்
OPS Mother Death: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் இன்று வெள்ளிக்கிழமை காலமானார்.
Continues below advertisement

ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் காலமானார்
OPS Mother Death: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பின் காரணமாக இன்று ( பிப்.24 ) காலமானார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாளுக்கு வயது 95. அவர் இன்று தேனி பெரியகுளத்தில் இரவு சுமார் 10 மணி அளவில் காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பழனியம்மாள் இன்று ( வெள்ளிக்கிழமை ) காலமானார்.
இந்நிலையில், தகவல் தெரிந்ததையடுத்து, சென்னையிலிருந்து தேனி பெரியகுளத்திற்கு ஓபிஎஸ் சென்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராகவும் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் தாயாரின் மறைவானது ஓ.பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவு, அதிமுக கட்சி தீர்ப்பு எதிராக வந்தது, தற்போது தாயாரின் மறைவு உள்ளிட்ட சோக நிகழ்வுகள் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஓபிஎஸ் தாயாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.