தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது 69வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அரசியல் தலைவர்கள், கட்சி தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். துரைமுருகன், நேரு, தயாநிதி மாறன் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் உடன் இருந்தனர்.






வாழ்த்துகள் குவிந்த நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ் முதலமைச்சரை சந்தித்து பிறந்துநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான ஃபகத் ஃபாசில் உடன் சென்றுள்ளார். இது குறித்து மாரி செல்வராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சமூக நீதியின் உச்சம் உங்கள் வரலாற்றின் வசமாகட்டும்” என தெரிவித்திருக்கிறார். 








முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்' சுயசரிதை நூலை ராகுல்காந்தி நேற்று  வெளியிட்டார். சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் முதல்வரின்  உங்களில் ஒருவன் புத்தகத்தை ராகுல் காந்தி வெளியிட, துரை முருகன் பெற்றுக்கொண்டார்.  ராகுல் காந்தி, உமர் அப்துல்லா மற்றும் பினராயி விஜயன், தேஜஸ்வி யாதவ்,கவிஞர் வைரமுத்து, நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 








மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண