கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை வெள்ளக்காடாகி உள்ளது. இரண்டு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் எல்லாம் விடுமுறை விடப்பட்டுள்ளன.


2015 நிலைமை வந்துவிடுமோ என சென்னைவாசிகள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், இயக்குநர் சேரன் சென்னை நிலவரத்தை சுட்டிக்காட்டி முந்தைய ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள் எனக் கேள்வி எழுப்பி அதிமுகவுக்கு எதிராக மிகக் காட்டமாக ஒரு பதிவிட்டுள்ளார்.


"மழை பாதிப்பு வந்தால் தண்ணீர் தேங்காமல் வெளியேற திட்டம் தீட்டி சென்னைக்கு மட்டும் மத்திய அரசிடம் 900 கோடிக்கு மேல் வாங்கினார்களே முந்தைய ஆட்சியில்...  இதுதான் அந்த திட்டத்தில் செயல்படுத்திய நகரமா.. இந்த ஃபைல முதல்ல எடுங்க @CMOTamilnaduஅய்யா.  என்று தனியும் இந்த...." என்று பதிவிட்டுள்ளார்.


சென்னை நகரில் அதிகபட்சமாக 23 செ.மீ. அளவில் மழை பெய்துள்ளது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 


அந்த நீர் வடியவே ஏற்பாடுகள் இல்லாத நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் தமிழகமெங்கும் பரவலாக கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


முதல்வர் ஆய்வு:


இதற்கிடையில், வடகிழக்குப் பருவமழை தொடங்கி பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் சென்னை பகுதிகளான சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை, தியாகராய நகர் ஆகிய பகுதிகளை முலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டு, அவற்றை உடனடியாகக் களைய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதேபோல், தமிழ்நாட்டில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முலலமைச்சர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.


அப்போது, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் பிரதமரிடம் முதல்வர் எடுத்துரைத்தார். தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் பற்றியும் பிரதமரிடம் எடுத்துரைத்தார்.


நிதி வேண்டும்:


பிரதமருடனான உரையாடலின் போது, தமிழகத்தின் மாநிலப் பேரிடர் நிதியானது கோரோனா நிவாரணப் பணிகளுக்கும், இதுவரை ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புகளுக்கும் செலவு செய்யப்பட்டுள்ளதால், தேசிய பேரிடர் நிதியிலிருந்து போதுமான நிதியை ஒதுக்கீடு செய்துதர வேண்டும் எனவும் பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


 


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


 


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


 


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


 


 


யூடிபில் வீடியோக்களை காண