சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்று வரும் முறைகேடுகள் தொடர்பாக துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த விசாரணைக்கு அங்கு உள்ள தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 


இது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், “சிதம்பரம் நடராஜர் கோயிலில் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க துணை ஆணையர் தலைமையில் குழு ஒன்று சென்றது. அவர்களை விசாரிக்கவிடாமல் தீட்சிதர்கள் தடுத்துள்ளனர். இந்த விசாரணையை தடுத்த நபர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண