தருமபுரி: மாவட்ட ஆட்சியர் இல்லம் பின்புறம் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கிலிருந்து நெல் எதுவும் மாயமாகவில்லை என மாவட்ட ஆட்சியர் சாந்தி விளக்கம் அளித்துள்ளார்.
தருமபு மாவட்ட ஆட்சியர் இல்லம் பின்புறம் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கிலிருந்து 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதாக பல்வேறு விதமாக தகவல்கள் பரவி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தருமபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7 ஆயிரம் டன் நெல் மூட்டை மாயமாகி உள்ளதாக செய்தித்தாள்களில் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மேலும், தருமபுரி அரசு கிடங்கிலிருந்து 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானது எப்படி?. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தருமபுரி திறந்த வெளி நெல் குடோனில் சுமார் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம்.?
தருமபுரி மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட நெல் அரவை முகவர்களின் கோரிக்கையின் காரணமாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் பங்களா பின்புறம் திறந்தவெளி நெல் குடோன் அமைக்கப்பட்டு இக்குடோனுக்கு தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து சரக்கு ரயில் மூலம் தருமபுரி ரயில்வே நிலையத்திற்கு நெல் கொண்டு வரப்பட்டு லாரிகள் மூலம் மாவட்ட ஆட்சியர் இல்லம் பின்புறம் உள்ள திறந்தவெளி நெல் குடோனில் இருப்பு வைக்கப்படுகிறது. இந்நிலையில் குடோனில் இருப்பு வைக்கப்பட்ட மொத்த நெல் மூட்டைகளில் பல டன் நெல் மூட்டைகள் மாயமானதாக நுகர் பொருள் வாணிபக் கழக விஜிலென்ஸ் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை எடுத்து விஜயலன்ஸ் பிரிவினர் தருமபுரி திறந்தவெளி நெல் குடோனில் ஆய்வு மேற்கொண்டனர் இந்த ஆய்வில் 7000 டன் நெல் மூட்டைகள் குறைவாக உள்ளதை கண்டுபிடித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தருமபுரி நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் கேட்டபோது திறந்தவெளி குடோனுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து 22 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வந்துள்ளது. போதிய பணியாளர்கள் இல்லாததால் லோடுமேன்கள் நெல் மூட்டைகளை முறையாக அடுக்க முடியவில்லை நெல் மூட்டைகள் குறைய வாய்ப்பில்லை என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தல்படியே 7000 டன் நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 டன் நெல் மூட்டைகளும் ஒரு மாதத்துக்குள் அரவைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் விளக்கம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் இல்லம் பின்புறம் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கிலிருந்து 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதாகவும், 7 ஆயிரம் மூட்டைகள் மாயமானதாகவும், பல்வேறு விதமாக தகவல்கள் பரவி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சாந்தி நெல் சேமிப்பு கிடங்கினை அரசு அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்,. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த ஆட்சியர் சேமிப்பு கிடங்கிலிருந்து நெல் எதுவும் மாயமாகவில்லை என்றார்.
மேலும், சேமிப்பு கிடங்கில் மூட்டைகள் சரிந்திருக்கிறது அதனை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவாதகவும், 7 ஆயிரம் டன் நெல் மாயமாகி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சேமிப்பு கிடங்கிலிருந்து நெல் எதுவும் மாயாகவில்லை எனவும், அதிகாரிகள் ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், நூறு சதவீத முழுமையான விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், “டெல்டா மாவட்டங்களிலிருந்து 11 வேகன்கள் மூலம் 22 ஆயிரத்து இருநூற்று எழுபத்து மூன்று மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டது. அதில் 7 ஆயிரத்து 174 மெட்ரிக் டன் அரவை ஆலைகளுக்கு நெல் மூட்டைகள் அனுப்ப பட்டிருக்கிறது. மீதம் 15 ஆயிரத்து 98 மெட்ரிக் டன் இருப்பு உள்ளதாகவும், இருப்பு முழுவதும் அரவைக்கு அனுப்பிய பிறகு ஆய்வுக்குட்படுத்துபட்ட பிறகு முழுமையான விபரங்கள் தெரியவரும்” என்றார்.
அதனைத் தொடர்ந்து தற்பொழுது குடோனில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் அனைத்தும் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.