அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி என்பது வதந்தி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற தகவல் வதந்தி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியான தகவலைத் தொடர்ந்து முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.மேலும் படிக்க




Pongal Wishes: 'உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள்' - பொங்கல் வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிசாமி..


பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட இருக்கும் சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “ உலகமெங்கும் வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எனதருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்”. இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க


Pongal 2024: ஒரே நாளில் 7 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை; எட்டயபுரம் சந்தையில் விற்பனை அமோகம்


பொங்கல் பண்டிகையையொட்டி இன்று அதிகாலை முதல் ஆட்டுச்சந்தை களைகட்டியது. தொடர் மழை காரணமாக கடந்த 2 வாரங்களாக ஆட்டுச்சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவாக வந்த நிலையில் இன்று சந்தைக்கு சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.


வெளிமாநில ஆடு ரகங்கள் எடைக்கு ஏற்ப 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்பனையானது. தொடர் மழையினால் கடந்த இரண்டு வாரங்களாக விற்பனை மந்தமாக இருந்த நிலையில் இன்று பொங்கல் பண்டிகை வியாபாரம் விறுவிறுப்பாக இருந்ததாகவும், ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது மட்டுமின்றி வெளியில் சற்று அதிகமாக விற்பனையானதாகவும், வளர்ப்பு ஆடுகள் விற்பனை குறைவாக காணப்பட்டதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.மேலும்,  கறிக்காக வாங்கும் மாடுகள் விற்பனை அதிகமாக காணப்பட்டதாகவும், ஏழு கோடி ரூபாய் வரைக்கும் இந்த பொங்கல் பண்டிகைக்கு விற்பனை நடைபெற்று இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.மேலும் படிக்க


தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய குழுவினர் மீண்டும் ஆய்வு - சேத மதிப்பீட்டு அறிக்கையை மத்திய அரசிடம் விரைவில் சமர்பிப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17, 18-ந் தேதிகளில் அதி கனமழை பெய்தது. இதனால் ஏராளமான குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். சாலைகள், பாலங்கள், அரசு அலுவலக கட்டிடங்கள் என பல ஆயிரம் கோடி மதிப்பிலான பொது சொத்துக்களும், தனிநபர் சொத்துக்களும் சேதமடைந்து உள்ளன. இந்த மழை வெள்ள சேதம் குறித்து கடந்த மாதம் 20-ந் தேதி 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது பெரும்பாலான இடங்களில் மழை வெள்ளம் தேங்கி நின்றதால் சேத மதிப்பை சரியான முறையில் கணக்கிட முடியவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மத்திய குழுவினர் மீண்டும் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தனர். இந்நிலையில் 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் தூத்துக்குடி வந்தனர். மத்திய குழு அதிகாரிகள் 2 குழுவாக பிரிந்து கள ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் படிக்க


Tamilnadu Mps - Amit Shah: கிடைக்குமா வெள்ள நிவாரணம்? - உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த தமிழக எம்.பிக்கள்!


தமிழ்நாட்டிற்கான வெள்ள நிவாரண நிதியை வழங்க கோரிக்கை வைக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சந்தித்துள்ளனர்.மேலும் படிக்க