துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் செந்தில்பாலாஜி பெயரில் மகா மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருக்காப்புலியூர் பகுதியில் உள்ள  ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மூலவர் மாரியம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Continues below advertisement

கரூரில் திமுகவினர் சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் செந்தில்பாலாஜி பெயரில் மகா மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Continues below advertisement

 


தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பதவியேற்றுக்கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவருக்கு மீண்டும் மின்சாரம் மதுவிலக்கு ஆயத் தீர்வுத்துறை அமைச்சரானார். பிறகு ஏராளமான திமுக நிர்வாகிகள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் திமுக பல்வேறு அணிகள் சார்பாக நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை திமுக நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர்.

 

 


இந்நிலையில் இன்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தலைமையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்ற கொண்ட நிலையில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருக்காப்புலியூர் பகுதியில் உள்ள  ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மூலவர் மாரியம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சுவாமிக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.

 

 


பின்னர் அப்பகுதியில் வசிக்கும் ஏழை தாய்மார்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜர் அவர்கள் தலைமையில் ஏராளமான திமுக நிர்வாகிகள் இனிப்புகளை வழங்கி தொடர்ச்சியாக தக்காளி சாதம், லெமன் சாதம், சர்க்கரை பொங்கல், புளி சாதம், ஊறுகாய் உள்ளிட்ட உணவுகளை வழங்கி சிறப்பித்தனர். அதை தொடர்ந்து மகா மாரியம்மன் ஆலய பிரசாதத்தையும் பெற்றுக் கொண்டு தமிழக துணை முதலமைச்சரும், மின்சாரத்துறை அமைச்சரும் தங்களது பணிகளை சிறப்பிக்க ஆலயத்தில் சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றது. 

 



முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேர்க்கை காமராஜ் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு தனது 50 மாத சம்பளத் தொகையை ஏழை எளிய மக்களுக்கு மாதம் தோறும் வழங்கி முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் நம்பிக்குரிய நபராக திகழ்ந்தார்.

 

 


அதை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக வந்த நிலையில் அதை தொடர்ந்து அவரும் திமுக கட்சியில் இணைத்துக் கொண்டு தனக்கு கொடுத்த கொடுக்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வரும் நிலையில் இவர் தற்போது பொதுமக்களுக்கு அன்னதான வழங்கி சிறப்பித்துள்ளார்.

குறிப்பு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி காமராஜ் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement