கரூரில், மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மேற்கு மாவட்ட செயலாளர் பி.எஸ்.என். தங்கவேல் தலைமையில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.




ஆர்ப்பாட்டத்தின் போது, திமுக ஆட்சி அமைத்த பின்பு கடுமையான மின் கட்டண உயர்வு ஏற்படுத்தியும், பல மடங்கு சொத்து வரியை உயர்த்தியதை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.




மேலும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் தவிர்ப்பது, மக்கள் விரோதப் போக்கினை நாள்தோறும் கடைபிடித்து வரும் திமுக அரசை கண்டித்தும், அம்மாவின் திட்டத்தை முடக்காதே, சொத்து வரி, மின் கட்டண உயர்வு திரும்ப பெறு என திமுக அரசை கண்டித்து கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.மணிமாறன், மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.