வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இதுதொடர்பாக டெல்டா வெதர்மேன் என அழைக்கப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது,


அதிகனமழை:


“ டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் இயல்பை விட மிக அதிக மழை பதிவாகக்கூடும். வட கடலோரம் டெல்டா மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் இயல்பிற்கு எஞ்சிய மழை பதிவாகக்கூடும். 24 மணி நேரத்தில் அதிக கனமழை வாய்ப்பும், குறுகிய கால பெருமழை வாய்ப்பும் தொடர்கிறது.


கடலோரத்தை ஒட்டிய உள்மாவட்டங்களான ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் கடலோர மாவட்டங்களான புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இயல்பிற்கு அதிக மழை வாய்ப்பு உள்ளது.

காற்றழுத் தாழ்வுப்பகுதி:


மேற்கு மாவட்டங்கள், கொங்கு மண்டலம் மற்றும் தென்மாவட்டங்களில் இயல்பான மழை பதிவாகக்கூடும். கடந்த 10ம் தேதி முதல் 25ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய கூடும். இதுவரை தமிழகம் மூன்று சுற்று மழையை பெற்றுள்ள நிலையில், டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து மேலும் மூன்று சுற்று வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கலாம்.


நான்காவது சுற்று பருவமழை டிசம்பர் 11ம் தேதி ( நேற்று) முதல் 11ம் தேதி வரை நீடிக்கக்கூடும். நன்கு அமைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி/ தாழ்வு மண்டலம் உருவாகி நான்காவது சுற்று மழையை கொடுக்கும். டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்கள் வரும் 11ம் தேதி இரவு முதல் 16ம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் பிரதானமாக மழை பெறக்கூடும். ஒட்டுமொத்த தமிழகமும் இந்த சுற்றில் மழை பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புயல் சின்னம்:


டிசம்பர் 20ம் தேதியை ஒட்டி தெற்கு வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம் உருவாகி தமிழக கடற்கரை நோக்கி நகரும். இதன் காரணமாக ஐந்தாம் சுற்று பருவமழை டிசம்பர் 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை எதிர்பார்க்கலாம். ஒட்டுமொத்தமாக டிசம்பர் மாதத்தில் பருவமழை தீவிரம் அடைந்து மழையை கொடுக்கும் நிகழ்வுகள் உள்ளது.


தற்போது தமிழகத்தின் பெரும்பாலான நீர்நிலைகளில் நீர் நிரம்பும் தருணத்தில் இருப்பதாலும், மண்ணில் ஈரப்பதம் வெகுவாக அதிகரித்து இருப்பதாலும் வரக்கூடிய 4 மற்றும் 5ம் சுற்றுகளில் கூடுதல் எச்சரிக்கை தேவை. குறிப்பாக, ஃபெஞ்சல் புயல் பாதிப்ப பாண்டிச்சேரி, கடலூர், விழுப்பரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கூடுதல் கவனமும், எச்சரிக்கையும் தேவை.  டெல்டா மாவட்டங்களில் வரும் நாட்களில் மிக கனமழை மற்றும் அதித கனமழை விவசாயத்தை பாதிக்கக்கூடும்."


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.