ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்:


தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள இலங்கை கடற்கரையில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது  என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், கிறிஸ்துமஸ் பண்டிகையான டிசம்பர் 25-ம் தேதி தென் கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது


தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய  இலங்கைக் கடற்கரையில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. அதன் பின் இது மேற்கு-தென்மேற்கு திசையில் இலங்கை பகுதியை நோக்கி நகரக்கூடும். 


மீனவர்கள் டிசம்பர் 22ஆம் தேதி தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.  டிசம்பர் 25-ம் தேதி தென் கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


22.12.2022: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60   கிலோ மீட்டர் வேகத்தில்   வீசக்கூடும். 


23.12.2022, 24.12.2022:  தென்மேற்கு வங்கக்கடல் மற்றும்  அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65   கிலோ மீட்டர் வேகத்தில்    வீசக்கூடும். 


25.12.2022:  தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும்  அதனை ஒட்டிய மேற்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65   கிலோ மீட்டர் வேகத்தில்    வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும்  அதனை ஒட்டிய கிழக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60   கிலோ மீட்டர் வேகத்தில்    வீசக்கூடும். 
 
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.