அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஜாக்பாட் இந்த மார்கழி மாதம்... காரணம் சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 11 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்து.... உங்களுக்கு என்ன தேவை என்பதை பூர்த்தி செய்யப் போகிறார்.... ஒளி கிரகமான சூரிய பகவான் 12 ராசிகளில் உங்களுடைய ராசிக்கு 11 ஆம் வீட்டில் இருப்பது தான் மிகச் சிறப்பானது... அந்த வகையில் கும்ப ராசிக்கு ஏழாம் வீடான சிம்ம ராசியின் அதிபதி பதினோராம் வீடான தனுசு ராசியில் பயணம் செய்யும் இந்த காலகட்டங்களில் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறுவதற்கான ஆரம்ப புள்ளியாக இந்த மார்கழி மாதம் இருக்கப் போகிறது.... சூரிய பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் பயணம் செய்யும் காலகட்டங்களில் வழக்குகளில் வெற்றி கிடைக்கும்... உங்களைப் பற்றி பின்னால் பேசியவர்கள் கூட உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்பார்கள்...

Continues below advertisement

 சூரியபகவானின் பூராட நட்சத்திர சஞ்சாரம் உங்களுக்கு புதிய வாகனங்களையோ அல்லது இடம் நிலம் தொடர்பான லாபத்தியோ கொடுப்பார்... எதிரிகள் எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும் உங்களை வெல்ல முடியாத அளவிற்கு சக்தி வாய்ந்தவர்களாக இந்த மார்கழி மாதத்தில் நீங்கள் திகழ்வீர்கள்.... சூரிய பகவானின் உத்திராட நட்சத்திர சஞ்சாரம் நீண்ட நாட்களாக திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கும் கும்ப ராசி அன்பர்களுக்கு தற்போது சுப நிகழ்ச்சிகளுக்கான ஆரம்பம் இனிதே துவங்கி விட்டது....

 ராசியிலேயே ராகு பகவான் அமர்ந்திருக்கிறார்.. தொழில்நுட்பத்திற்கு அதிபதியான ராகு பகவானை நீங்கள் வியாபாரத்திற்காக மிக சிறப்பாக பயன்படுத்தினால் உங்களுடைய தொழில் மற்றும் வியாபாரம் பன்மடங்காக உயரும்.... 5ஆம் இடத்தில இருக்க கூடிய குரு பகவானின் பார்வை உங்களுடைய ராசியில் பதிவாவதால் நீங்கள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு காரியங்களிலும் உங்களுக்கு புகழ் கூடும்... உங்களுடைய அறிவுக்காக நீங்கள் மதிக்கப்படுவீர்கள்...

Continues below advertisement

 உங்களிடத்தில் வந்து எதைப் பற்றியாவது கேட்க நினைத்தால் அதற்கான தீர்வுகளை நீங்கள் உடனடியாக கொடுக்கலாம்... மற்றவர்களால் விரும்பப்படும் நபராக நீங்கள் மாறுவீர்கள்.... சனி பகவான் இரண்டாம் இடத்தில் சஞ்சாரம்... வீட்டில் உள்ள மூத்தோர் சொல் கேட்பது உங்களுக்கு லாபத்திற்கு வழி வகுக்கும்.... அதாவது வீட்டில் பெரியவர்கள் நல்ல காரியங்களை குறித்து பேசினால் அதை காது கொடுத்து கேளுங்கள் அதன் மூலம் வருமானம் உயர வாய்ப்புண்டு... தொழில் ரீதியான அறிவுரைகளை நீங்கள் உங்களைவிட அனுபவ சாலிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.....

 ஏழாம் இடத்தில் இருக்கக்கூடிய கேது பகவானால் வாழ்க்கை துணை உடன் சிறு சிறு சண்டை சச்சரவுகள் வரலாம் ஆனால் அவை நிரந்தரமாக இருக்காது.... பெரும்பாலும் நீங்கள் அமைதியை காப்பாற்றி... வீட்டில் எந்த விதமான சலசலப்புகளை உருவாக்காமல் சிறிய பிரச்சினைகளை அப்படியே முடித்துக் கொண்டு செல்வது நல்லது.... இல்லாதவருக்கு உதவி செய்யுங்கள்... யாருக்கேனும் ஒரு வேலை அன்னதானம் வாங்கி கொடுங்கள் உங்களுடைய பிரச்சனைகளில் பாதி குறைந்து விடும்.... வருகின்ற மார்கழி மாதத்தை பொறுத்தவரை உங்களுக்கு சிறப்பான மாதமாக இருப்பதால் எதிலும் நிதானமாக பொறுமையை கடைப்பிடித்து சிறப்பாக செயல்படுங்கள்.... நவகிரக வழிபாடு உங்களுக்கு மேன்மையையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரும் வாழ்த்துக்கள் வணக்கம்....s