அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே மார்கழி மாதம் என்றாலே உங்கள் ராசியிலேயே சூரிய பகவான் சஞ்சாரம் செய்கிறார்... நவகிரகங்களில் சூரிய பகவானின் ஒளி உலகமெங்கும் பரவும் அளவிற்கு புகழைத் தேடித் தரும்... அப்படியாக உங்கள் ராசியின் மீது சூரிய பகவானின் ஒளிபடும் பொழுது உங்களுடைய புகழும் அதே போல இந்த மார்கழி மாதத்தில் அனைவருக்குமே தெரிந்த ஒரு நபராக மாறுவீர்கள்...

Continues below advertisement

 பாக்கியஸ்தானதிபதி என்று சொல்லக்கூடிய ஒன்பதாம் அதிபதி ராசிக்கு வருவதால் பூர்வீகம் தொடர்பான நல்ல காரியங்களும்... தந்தை யார் வழி தொடர்பான சில நல்ல நிகழ்வுகளும் உங்களுக்கு நடந்தேறும்... சூரிய பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் பொழுது தொழில் ரீதியான பல முன்னேற்றங்களை நீங்கள் அனுபவிப்பீர்கள்... குறிப்பாக ஆன்மீக தொடர்பான எந்த காரியங்களும் உங்களுக்கு கை கொடுக்கும்...

 நீண்ட நாட்களாக எனக்கு இது நடக்க வேண்டும் என்று மனதில் நினைத்த கோரிக்கைகள் கூட தற்பொழுது நீங்கள் ஆலயங்களுக்கு சென்று உங்களுடைய கோரிக்கைகளை வைப்பதன் மூலம் தெய்வ அணுக்கிரகத்தால் அவை நல்லபடியாக முடிய வாய்ப்பு உண்டு...

Continues below advertisement

 சூரிய பகவான் பூராட நட்சத்திரத்தில் பயணிக்கும் இந்த காலகட்டங்களில் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும் உடனடியாக உதவிகள் மூலம் நீங்கள் முன்னேறுவீர்கள்... எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் சட்டென்று அவை முடிந்து விடும்... நோய்களும் இந்த காலகட்டங்களில் தீர்ந்து உங்களுக்கு நன்மை பெருகும்.... பெரு மகிழ்ச்சி பெறுவதற்கான காலகட்டமாகவே மார்கழி மாதத்தின் மத்திய பகுதி உங்களுக்கு அமையவிருக்கிறது...

 சூரிய பகவான் உத்திராட நட்சத்திரத்தில் பயணம் செய்யும் காலத்தில் நீங்கள் ஒரு குருவாக இருந்து அடுத்தவர்களுக்கு வழிகாட்டும் சக்தி உங்களுக்கு கிடைக்கப் போகிறது... மார்கழி மாதம் முடியும் சமயத்தில் அதாவது வருட பிறப்பின் முதல் வாரங்கள் நீங்கள் அடுத்தவர்களுக்கு ஒளியாக மாறி பிரகாசிப்பீர்கள்... இந்த காலகட்டம் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான காலகட்டமாக அமையப் போகிறது... ஆகவே சூரிய பகவான் மார்கழியில் உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்யும் இந்த காலகட்டங்களில் நீங்கள் சாதிக்க வேண்டியவைகளை நிச்சயமாக ஒரு நல்ல வழியில் சாதித்து நல்ல பெயர் புகழ் எடுத்துக் கொள்வீர்கள்...

 சனி பகவான் உங்கள் வீட்டில் நான்காம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார் ஆகையால் உடைத்துக் கொண்டே இருங்கள் சனி பகவானின் அனுக்கிரகம் உங்கள் மீது எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்... ஒரே இடத்தில் இருக்க வேண்டும் ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம்... ஓட ஓட உங்களுடைய வாழ்க்கையின் பொருளாதார முன்னேற்றம் பெயர் புகழ் பதவி போன்றவை உங்களைத் தேடி வந்து கொண்டே இருக்கும்... இந்த மார்கழி மாதத்தில் கேது பகவான் 9 ஆம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய பாக்கியத்தை வேண்டுதல் மூலமாக நிறைவேற்ற காத்திருக்கிறார்... குருபகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை நேர்பார்வையாக பார்க்கிறார்... அது மட்டுமல்லாமல் உங்கள் வீட்டு பாக்கியஸ்தானதிபதியான சூரிய பகவானையும் குரு பகவான் பார்வையிடுவதால் உண்மையாகவே உங்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை அங்கீகாரங்களும்... நீங்கள் ஆசைப்படுவது போன்ற ஒரு வாழ்க்கையும் உங்களுக்கு அமைத்துக் கொள்வதற்கான அடித்தளம் இந்த மார்கழி மாதத்தில் அமையும்....

 சூரிய பகவானை வழிபட்டு வாருங்கள் நவகிரகங்களில் இருக்கும் சூரியனை விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் உங்கள் வாழ்க்கை ஒளிரும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை...