அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே சனி 12-ம் வீட்டில் அமர்ந்திருக்க... ராகு 11 ஆம் வீட்டில் இருக்க... குரு 3-ம் வீட்டில் வக்ரம் பெற... சுக்கிரன் 8 மற்றும் 9-ம் வீட்டில் இருக்க  என்ன மாதிரியான பலன்களை நீங்கள் சந்திக்க போகிறீர்கள்...?  உங்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடிய 8-ம் அதிபதி  செவ்வாய் 9-ம் வீட்டில் பாக்கிய ஸ்தானத்தில் இருக்க -நல்ல கிரகநிலை... தொல்லைகள் நீங்கும் காலம் இது...

Continues below advertisement

சூரியனை மையமாக வைத்து மாதங்கள் நகர்வதால்  மேஷ ராசிக்கு 5-ம் அதிபதி சூரியன் 9 ஆம் வீட்டில்  பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்.   நீண்ட நாட்களாக  நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் மெல்ல மெல்ல நல்ல நிலைமைக்கு வரப்போகிறது. சுபகாரிங்கள் வீட்டில் நடைபெறும் திருமணம்,  குழந்தை பாக்கியம், மனதிற்கு பிடித்த  ரம்யமான சம்பவங்கள்,  குறைகளாக இருகின்ற காரியங்கள் நிறைகளாக மாறும், சந்திக்க வேண்டும் என்று இருந்த நபர்கள், உங்களை தேடி வருவார்கள்,  உங்களைப் பற்றி மற்றவர்கள் குறை கூறியது எல்லாம்  மறைந்து உங்களின் புகழ் ஓங்கும் மாதம்.   

கார்த்திகை முடிந்து மார்கழி வரும் காலமே மேஷ ராசிக்கு விடிவு காலம். காரணம் கார்த்திகையில்  அஷ்டமத்தில் சூரியன் பயணிப்பார்...  மார்கழி பிறந்ததும் அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வருவார்.  பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள்.     நீண்ட தூர பிரயானங்களின் மூலம் வெற்றி பெற வாய்ப்பு அதிகம்...   வீட்டில் சிறுசிறு கடன் கஷ்டங்கள், சச்சரவுகள் வந்தாலும் கூட  பெரிய அளவில் உங்களை பாதிக்கப் போவது இல்லை.  நண்பர்களின் வருகையால்  வீடு களைக்கட்டும்.  உற்றார் உறவினரோடு நேரம் செலவிடுவதற்கான காலகட்டம்.   வாகனம் மூலம் நன்மை ஏற்படும்...  புதிய பலவாய்ப்புகள் உங்களை தேடி வரும்...

Continues below advertisement

  சட்டென்று கோபப்பட்டு  வார்த்தையை விட வேண்டாம்.  கடன் கேட்டிருந்தால் அவை கிடைப்பதற்கு வாய்ப்புண்டு.  தொழில் ரீதியான முன்னேற்றத்தை பொறுத்த வரை 10-ம் அதிபதி 12-ம் வீட்டில் இருப்பதால் வேலை மாற்றம் உங்களை தேடி வரும்... ஒரு முறை, இருமுறைக்கு வேலையை தேர்ந்தெடுக்கலாமா? வேண்டாமா என்று தீர்க்கமாக முடிவெடுத்து செல்வது நல்லது  வேலையில் பெறிய அலைச்சல் உண்டு...

செலவு செய்து  பின்பு லாபம் ஏற்றக்கூடிய காலம்.   பத்தாம் வீட்டிற்கு  அஷ்டமாதிபதி சூரியன் 12ல் இருப்பது  தொழில் ரீதியான மிகப்பெரிய முன்னேற்றங்களை கொண்டு வரும்.   எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்  ஏற்கனவே குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 9 ஆம் வீட்டில் தான் விழுந்து கொண்டிருக்கிறது...  பதினொன்றாம் வீட்டில் இருக்கும் ராகு பகவான்  டிஜிட்டல் உலகில் உங்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்ய முடியுமோ அவ்வளவும் செய்ய தயாராக இருக்கிறார்...  நீங்கள் உங்களுடைய வியாபாரத்தை பெருக்குவதற்காக சமூக வலைதளங்களை பயன்படுத்தினால் உடனடியாக உங்களுக்கு பதில் வரும்....  ஐந்தாம் வீட்டில் இருக்கும் கேது பகவான் மிகப்பெரிய ஆன்மீக சிந்தனைகளை உங்களுக்கு உருவாக்கும்...  பக்தியின் மூலம் உங்களுடைய  குணாதிசயங்கள் நல்ல முறையில் வெளியில் தெரியவரும்...  12-ஆம் வீட்டில் குருவின் நட்சத்திரத்தை வாங்கி சனிபகவான் அமர்ந்திருக்கிறார் இந்த காலகட்டத்தில்  வெளிநாடு வெளியூர் பயணங்கள் தூர தேசத்து  சகவாசங்கள் எல்லாம் உங்களுக்கு நன்மையை மட்டுமே கொண்டு வரும்....  அருகில் இருக்கக்கூடிய முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்கும்...