காவிரி ஆற்றில் மாயனூர் கதவனைக்கு வரும் தண்ணீர் அளவு குறைந்துள்ளது.


கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு நேற்று வினாடிக்கு 9,991 கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி 9,397 கன அடி தண்ணீர் ஆக உள்ளது. இந்நிலையில் டெல்டா பாசன பகுதிகளின் சாகுபடி பணிக்காக காவிரி ஆற்றில் இருந்து 8,277 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில் 1,120 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.


 


 





மேலும் அமராவதி அணையின் தண்ணீர் நிலவரம்.


திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி ஆற்று அணைக்கு காலை நிலவரப்படி வினாடிக்கு 359 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்நிலையில் 900 கன அடி தண்ணீரும் புதிய பாசன வாய்க்காலில், 440 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 84.29 கன அடியாக உள்ளது.


 




 


மேலும் நங்கஞ்சி அணையின் தண்ணீர் வரத்து.


திண்டுக்கல் மாவட்டம், நங்கஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால் காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து எதுவும் இல்லை. மேலும், 39.37 கன அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 32.90 கன அடியாக உள்ளது.



மேலும் ஆத்துப்பாளையம் அணையின் தண்ணீர் நிலவரம்.


கரூர் மாவட்டம், க. பரமத்தி அருகே கார்விழி, ஆத்துப்பாளையம் அணைக்கு காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து எதுவும் இல்லை. மேலும், 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 23.41 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து நொய்யல் ஆற்றுக்கு வினாடிக்கு 94 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


 


 


 





தமிழகத்தில் பல்வே இடங்களில் கன மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் பொறுத்தவரை பல்வேறு இடங்களில் நீர்வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது.மேலும், நேற்று இரவு திடீரென கரூர் நகரப் பகுதிகளில் மழை பெய்ததால் சற்று வெயிலின் தாக்கம் தணிந்தது. எனினும் தற்போது காவிரி, அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக உள்ளதால் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் விவசாயிகள் ஆற்றில் வரும் தண்ணீரில் அளவை கணக்கில் கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர்.