Chennai Rain Flood Warning: சென்னையில் பெருமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால்,  பொதுமக்கள் செய்யக் கூடாதவை என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை:


மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், கடந்த ஞாயிறு இரவு தொடங்கி நேற்று இரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சென்னையில் மாநகரின் செயல்பாடு என்பதே பெரும்பாலும் ஸ்தம்பித்துள்ளது. முக்கிய சாலைகளில் மோட்டார்கள் கொண்டு தேங்கியிருக்கும் தண்ணீர் வெளியேற்றப்பட்டாலும், பல உட்புற பகுதிகளில் மழைநீர் எளிதில் வடிவதற்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில், மக்கள் செய்யக் கூடாதவை என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


பொதுமக்கள் செய்யக்கூடாதவை..!



  • தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அநாவசியமாக வெளியே வரக்கூடாது

  • அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்லும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

  • தண்ணீரில் தேள், பாம்பு போன்றவை இருக்கலாம் என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும்

  • செருப்பு அணியாமல் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் நடக்க வேண்டாம்

  • டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதியில் வசிப்பவர்கள் மிகவும் ஜாக்கிரதயாக இருக்க வேண்டியது அவசியம்

  • செல்போன் போன்ற மின்சார சாதனங்களை தேவைக்கேற்ப பயன்படுத்துங்கள்

  • இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள், முதலில் சாலையில் இருக்கும் தண்ணீரில் வாகனத்தை செலுத்த முடியுமா என்பதை சிந்தித்து செயல்படுங்கள்

  • வாகன ஓட்டிகள் நன்கு பாதை நன்கு தெரிந்த பகுதிகளில் மட்டும் பயணிக்கவும்

  • தண்ணீரில் முழுவதுமாக மூழ்கியுள்ள பாதைகளில் வாகனம் ஓட்டுவதை தவிருங்கள்

  • புதிய பகுதிகளுக்கு வாகனத்தில் சென்று அநாவசியமாக சிக்கலை எதிர்கொள்ள வேண்டாம்

  • தண்ணீர் தேங்கிய பகுதிகளில் வாகனத்தை மெதுவாக செலுத்துவதன் மூலம், சாலையோரம் நடந்து செல்பவர்கள் மீது தண்ணீர் அடிக்கப்படுவதை தவிர்க்கலாம்

  • கூகுள்பே போன்ற ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செயலிகளை நம்பி கடைக்கு செல்ல வேண்டாம்

  • பல இடங்களில் இன்னும் மின்சார சேவை கிடைக்காததால் ஏடிஎம் இயந்திரங்களும் இன்னும் முழுமையான பயன்பாட்டிற்கு திரும்பவில்லை

  • கையில் இருக்கும் பணத்தை அடிப்படை தேவைகளுக்கு என சிக்கனமாக பயன்படுத்தி கொள்ளுங்கள்

  • அத்தியாவசிய பொருட்களை மொத்தமாக வாங்கி குவிக்க வேண்டாம் - தேவைக்கேற்ப வாங்கி பயன்படுத்திக் கொள்ளவும்

  • சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்பாமல், வானிலை ஆய்வு மையம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் நம்பி செயல்படுங்கள்