கடலூர் : பட்டுப்புடவை.. சீர்வரிசை பொருட்கள்.. காதல் ஜோடிக்கு திருமணம் நடத்திவைத்த இன்ஸ்பெக்டர்

காதல் ஜோடிகளுக்கு சொந்த செலவு பட்டுப்புடவை எடுத்து வைத்து திருமணம் செய்து வைத்த ஆய்வாளர்.

Continues below advertisement
கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகதாஸ் மகன் வெங்கடேஷ் (21). இவர் கடலூர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஆந்திரா மாநிலம் சூலூர்பேட்டையை சேர்ந்த முனி கிருஷ்ணப்பா மகள் சுஜிதா (21) என்பவருக்கும் முகநூல் வழியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 
இந்த பழக்கம் நாளடைவில் இவர்களுக்கிடையே காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சுஜிதாவின் வீட்டில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் சுஜிதா தன்னுடைய காதலனை எப்படியாவது கரம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கடலூர் வந்துள்ளார். அவருக்கு தமிழ் தெரியாததால் ரயில் நிலையத்தில் நின்று கொண்டு எங்கு செல்வது என்று தெரியாமல் இருந்துள்ளார். இது குறித்து ரயில்வே ஊழியர்கள் கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
 
அதன் பேரில் அவர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது சுஜிதா நடந்த சம்பவங்கள் குறித்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியிடம் தெரிவித்துள்ளார் இதையடுத்து அவர், சுஜிதாவின் காதலன் வெங்கடேசுக்கு தகவல் தெரிவித்து காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளார்.
 
 பின்னர் இருவரிடம் விசாரணை நடத்தியுள்ளார் அப்போது சுஜிதா தன்னுடைய காதலனை கரம் பிடிப்பதில் உறுதியாக இருந்துள்ளார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தனது சொந்த செலவில் சுஜிதாவிற்கு பட்டுச்சேலை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வாங்கிக்கொடுத்து வெங்கடேசுடன் திருமணம் செய்து வைத்தார். இதனால் காதல் தம்பதி மகிழ்ச்சியுடன் சென்றனர்.
 

மேலும் ஒரு செய்தி கடலூரில் இருந்து..

Continues below advertisement

மறைந்த முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் உடலுக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் அஞ்சலி.

கடந்த 1991-1996 அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையில் பால்வள மற்றும் கால்நடை துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ஜனார்த்தனன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார் அவரது உடல் அவர்கள் சொந்த ஊரான கடலூர் அண்ணா நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கடலூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத், கழக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் கடலூர் பாரதி சாலையிலிருந்து ஊர்வலமாக வந்து மறைந்த முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்ட செயலாளர், அதிமுக எம் ஜி ஆர் மன்ற செயலாளர், மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகுத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நன்மதிப்பு பெற்றவர் ஜனார்த்தனன்.

இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கடலூர் வடக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் சேவல் குமார், பகுதி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Continues below advertisement