டெல்லி சென்றாலே இடமாறுதலா? எனக்கேள்வி எழுப்பிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், அரசியல்வாதியாக இருந்தபோதும் விமர்சனம் வருவதாகவும், ஆளுநராக இருக்கும்போதும் விமர்சனம் வருவதாகவும் கூறினார்.
இதுதொடர்பாக ஆளுநர் தமிழிசை அளித்த போட்டியில், தன்னை விட, திறமை உள்ளவராக போட வேண்டும் என்று சொல்லுகிறார்கள். நான் சவால் விடுகிறேன். பெண் என்றால் சாதிக்க முடியாதா ? என்னை விட யார் திறமையாக செயல்பட முடியும். இரண்டு மாநில ஆளுநர் பணியை எந்த இடத்திலும் குறைவைத்தது இல்லை. நான் ஒரு பாக்கியசாலி. இத்தனை அன்பு எனக்கு கிடைத்துள்ளது. மக்களிடம் அதிகமாக செல்கிறார் என்பதால் சில நேரங்களில் பிரச்னைகள் ஏற்படுகிறது. அரசியல்வாதியாக இருக்கும்போது விமர்சனம் வருகிறது. ஆளுநராக இருக்கும்போதும் விமர்சனம் வருகிறது. சும்மா டெல்லி சென்றால் அதற்குள் என்னை இடம் மாறுதல் செய்ய போவதாக சொல்கிறார்கள். தெலங்கானாவில் ஆளுநராக பணியாற்றுவது சாதாரண விஷயமல்ல. அங்கேயே பணி செய்துவிட்டேன். அதனால் எங்கு சென்றாலும் பணியை செய்வேன்” என்றார்.
ஆளுநரின் தேநீர் விருந்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது தொடர்பாக தமிழிசை கூறுகையில், “அழைப்பு வந்தால் மரியாதை கொடுங்கள். வேண்டாம் வர மாட்டேன் என்று கூறினால் பெரியவர்கள்? அல்லது மதித்து வந்தால் அவர்கள் தாழ்ந்தவர்களா?” எனக்கேள்வி எழுப்பிய தமிழிசை, வேற்றுமைகள் இருக்கலாம், அழைப்பு வந்தால் மதித்து அதை மறந்து எல்லோரும் மகிழ்ச்சியாக ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறினார்
தொடர்ந்து பேசுகையில், “ஆளுநரும், முதலமைச்சரும் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு புதுச்சேரி உதாரணம். முதலமைச்சர், ஆளுநர் ஒன்றாக இல்லை என்றால் எப்படி இருக்கும் என்பதற்கு தெலங்கானா ஒரு உதாரணம். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், ஜனநாயக படி நடக்காமல் இருப்பது சரியா என்று தெரியாவில்லை. நான் தெலுங்கானாவை சொல்கிறேன். அவர்கள் சொன்ன ஒரு எம்எல்சி நான் கையெழுத்துப் போடவில்லை அதுதான் பிரச்னைக்கு காரணம். சொன்ன இடத்தில் நான் கையெழுத்திட நான் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்