இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் மழையால் கைவிடப்பட, இரண்டாவது நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மையால் பாதியிலேயே தடைபட, மூன்றாவது நாள் ஆட்டத்தை நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியிருந்தது. இந்நிலையில், இன்று நடைபெற இருந்த நான்காவது நாள் ஆட்டத்தையும் மழை குறுக்கிட்டதால், போட்டி தொடங்குவதில் தாமதம் நீடித்தது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால், நான்காவது நாள் போட்டி ரத்து செய்யப்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




இந்திய அணி மீண்டும் ஆட்டத்திற்கு உள்ளே வர நியூசிலாந்து அணியை அவுட் செய்ய வேண்டியது அவசியமாக இருந்தது. இந்நிலையில் 4வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், போட்டி டிரா ஆவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கிரிக்கெட் போட்டி குறித்தும்,  வானிலை குறித்தும் பேசிக்கொண்டிருந்த கிரிக்கெட் விமர்சர்கள் கிக்கின்ஸ் மற்றும்ம் சாம் பெர்ரி தமிழ்நாட்டு நபர் ஒருவரைக் குறிப்பிட்டு பேசினர். அவர் வேறு யாருமில்லை. தமிழ்நாட்டு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் குறித்துதான். சவுத்தாம்ப்டனின் இன்றாவது சூரியன் வருமா? என்று வானிலை குறித்து கிக்கின்ஸ் கேள்வி கேட்க, அதை கணிப்பதற்கு நான் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் இல்லை எனக் கூறி சிரிக்கிறார் சாம் பெர்ரி. இந்த வீடியோவை பகிர்ந்து பலரும் வெதர்மேன் பிரதீப்ஜானை டேக் செய்து வருகின்றனர்.




2015-ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்திற்கு பிறகு சென்னையில் பிரபலமானவர் வெதர்மேன் பிரதீப்ஜான். வெள்ளத்தை சரியாக கணித்து பதிவிட்டிருந்தார். இவர் சொன்னதுதான் நடந்தது என அவருக்கு ஃபாலோவர்களும் அதிகரித்தனர். அதன் பின்னர் மழை, வெயில் என வானிலை தொடர்பாக அனைத்தையும் சென்னை மக்களுக்கு தெளிய வைத்தார் வெதர்மேன். சென்னையில் மழை என்று பொதுவாக சொல்லாமல் ஏரியா வாரியாக மணியைக் குறிப்பிட்டு மழை விவரத்தை குறிப்பிடுவதால் இவர் தனித்து நின்றார். பின்னர் சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு, இந்தியா என வானிலை அறிக்கையை கூறி வருகிறார். தன்னார்வத்தாலும், வானிலை மீது ஆசையாலும் இன்று வெதர்மேனாக மாறி இருக்கிறார் பிரதீப்ஜான். 






 


முன்னதாக மைதானத்தில் போதிய வெளிச்சமின்மை ஏற்பட்டதால் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 3வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து அணி மூன்றாவது நாளை முழுமையாக கைப்பற்றியது. 


'கொஞ்சம் தசை கட்டு, சற்று பெரிய தலைக்கட்டு' நங்கூரம் என பாயும் நாய்கள்..!