கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை தொடரும் முக்கிய நெடுஞ்சாலையாகும். இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் கார், பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட 50,000க்கும் அதிகமான வாகனங்கள் செல்கின்றன.

பாலம் சேதம்:

இச்சாலையின் ஓசூர் பேருந்து நிலையம் அருகே, சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. தற்போது, இந்த மேம்பாலம் வழியாக கனரக வாகனங்கள் அதிக அளவில் பயணிப்பதன் காரணமாக, மேம்பாலம் மற்றும் சாலை இணைப்பு பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்றிலிருந்து இந்த மேம்பாலத்தில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியாக இயக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டு பல கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 

பொறியாளர் ஆய்வு:

இது குறித்து தலைமை பொறியாளர் பிரசன்னா ஆய்வு மேற்க்கொண்டார் அப்போது பேசிய அவர், “மேம்பாலத்தின் வழியாக அதிகளவில் கண்டெய்னர் லாரிகள் செல்வதால் மேம்பலத்தின் தூணிற்கு மேல் உள்ள பாட்பேரிங் ( பானைபோன்ற கம்பிகள் )ஒரு பகுதி உடைந்திருக்கும் அல்லது விலகி இருக்கலாம். இதனால் மைய இணைப்பு பகுதி அரை அடிக்கு விலகி உள்ளது என்றார்

இதனால மேம்பாலத்தில் வாகனங்கள் செல்வற்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம் ஹைதராபாத்திலிருந்து திட்ட அதிகாரி வந்து ஆய்வு செய்த பின்னர் ஜாக்கி வைத்து சீரமைக்கப்படும் அதன் பிறகு வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படும்” எனக் கூறினார்.

மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கம்:

கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கிருஷ்ணகிரி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை (NH-44) மேம்பாலத்தில், திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளதால். பாதுகாப்பின் காரணமாக மேற்படி மேம்பாலத்தின் வழியாக அனைத்து வகையான வாகனங்களின் இயக்கம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓசூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கனரக வாகனங்கள் மட்டும் கீழ்கானும் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு வாகன ஓட்டுநர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்னையிலிருந்து பெங்களுர் செல்லும் கனரக வாகனங்கள் கீழ்கானும் மாற்று பாதைகளை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1. சூளகிரி உத்தனப்பள்ளி -ஒசூர்-பெங்களூர்

2. கிருஷ்ணகிரி இராயக்கோட்டை - உத்தனப்பள்ளி -ஒசூர் பெங்களூர்,

சேலத்திலிருந்து பெங்களூர் செல்லும் கணரக வாகனங்கள் கீழ்கானும் மாற்று பாதையை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1. தருமபுரி பாலக்கோடு இராயக்கோட்டை உத்தனப்பள்ளி ஓசூர்-பெங்களும்

மேலும் மேற்கண்ட தேசிய நெடுஞ்சாலையில் ஏதேனும் இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் கீழ்க்கண்ட எண்ணுக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்பு எண்: 9498181214

9498101090

9498101093