திருவண்ணாமலை : டாஸ்மார்க் கடையினால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராம புறங்களில் சுமார் 25 இளம் விதவைகள் உருவாகி உள்ளனர் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement


திருவண்ணாமலை புறவழிச்சாலை சோ.கிழ்.நாச்சிபட்டு பகுதியில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது, இதில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் இந்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 


இதைத் தொடர்ந்து செய்தியாளர் சப்திப்பில் பேசுகையில்...


சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாகவும், நரேந்திர மோடி முயற்சியால் சர்வதேச யோகா தினத்தை ஐநா சபை அங்கீகரித்ததாகவும் தெரிவித்தார். விசாகப்பட்டினத்தில் உலக சாதனை படைக்கும் அளவிற்கு மூன்று லட்சம் பேர் 28 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரே நேரத்தில் யோகா செய்து சாதனை படைத்துள்ளதாகவும், இந்த உலக சாதனை முயற்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டுள்ளார் என தெரிவித்தார்.  யோகா கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் இது இளைஞர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என தெரிவித்தார். ரத்த அழுத்தம் சர்க்கரை வியாதி போன்ற அனைத்தையும் சரி செய்யக்கூடிய மகத்துவம் யோகாவிற்கு உள்ளதாகவும், மனநலம் உடல்நலத்தை சீராக வைப்பது யோகா என குறிப்பிட்டார். 


தமிழக அரசியலில் நாளை ஒரு முக்கிய தினம் என்றும் நாளை முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது என்றும் இதில் பல லட்சம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பங்கேற்க உள்ளதாகவும், நாளை நடைபெற உள்ள மாநாட்டிற்கு இன்று உலகம் முழுவதிலும் இருந்து முருக பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளதாக குறிப்பிட்டார். முருகனின் ஆறுபடைகளும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதாகவும் முருக பக்தர்கள் அங்கு சாமி தரிசனம் செய்து வருவதாகவும் குறிப்பிட்டு பேசினார்,


தற்போது திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய பல கட்சிகள் வெளியே வரக்கூடிய நிலை உள்ளதாகவும் இந்தக் கூட்டணி உடையும் கூட்டணி என குறிப்பிட்டார். மேலும் திமுக கட்சி மீது தமிழக மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், இந்த அதிருப்தி கூட்டணி கட்சிகளை பாதிக்கும் என கருதி திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியும் வெளியேறும் என தெரிவித்தார். 


அதிமுக பாஜக கூட்டணிக்குள் இருக்கிற விவகாரங்கள் குறித்து தேசிய தலைவர்களும் மாநில தலைவர்களும் பார்த்துக்கொள்வார் எனறும் குறிப்பாக அமித்ஷா அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என குறிப்பிட்டார். தமிழகத்தில் உள்ள பல கோவில்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் ஆகவே தமிழக அரசு கோவில்களுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் இல்லையென்றால் கோவிலை விட்டு வெளியேற வேண்டும் என தெரிவித்தார். முருக பக்தர்கள் மாநாட்டின் முக்கிய நோக்கமே கோவில்கள் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராத தமிழக அரசு கோவிலை விட்டு வெளியேற வேண்டும் என கேட்டுக்கொண்டார். 


2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்றும், அதற்கு உண்டான அனைத்து பணிகளையும் மத்திய அமைச்சர் அமித்ஷா செய்து வருவதாகவும் தெரிவித்தார். தமிழகத்திற்கு ஒவ்வொரு மாதமும் வந்து அமித்ஷா வழிகாட்டுவதாகவும் அவர் வழிகாட்டத்தின்படி செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.  ரயில்வே துறையை பொறுத்தவரையில் 2014ஆம் ஆண்டுக்கு முன்பாக வெறும் 800 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், பாஜக அரசு தற்போது ஒவ்வொரு ஆண்டும் 6000 கோடி ரயில்வே க்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்வதாக குறிப்பிட்டு பேசினார். தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில்வே பாதைகளும் மின்மயமாக்கப்பட்டுள்ளதாகவும் அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆண்டு மட்டுமே 9 புதிய ரயில் பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது, சட்ட ஒழுங்கு என்றால் என்னவென்று அர்த்தமே தெரியாத ஒரு முதலமைச்சர் தன் தற்போது ஆட்சி செய்து வருகிறார், துப்பாக்கி, அருவாள் கலாச்சாரம் போய் தற்போது கஞ்சா ட்ரக்ஸ் கலாச்சாரம் தமிழகத்தில் தற்போது உருவாகி உள்ளது என்றும்,  தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும், பள்ளிக்கூடங்களில் கஞ்சா, ட்ரக்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் கிடைப்பதாக இதன் காரணமாக பெற்றோர்கள் மிகுந்த கவலையுடன் இருப்பதாகவும், அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மார்க் கடையினால் ஒவ்வொரு கிராமப் பகுதிகளிலும் சுமார் 20 முதல் 25 இளம் விதவைகள் இருக்கின்ற சூழல் தமிழ்நாட்டில் நிலவுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.