மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. ஊரடங்கு அறிவிப்பில் கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் 50 சதவீதம் வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.  74 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.


தற்போது வேகமாக பரவி கொரோனா தொற்று நடிகர், நடிகைகள் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான சங்கரய்யா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


 






சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் என்.சங்கரய்யா. இவர், கடந்தாண்டு தனது 100ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். 100ஆவது பிறந்தநாளையொட்டி, அவருக்கு தமிழ்நாடு அரசு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என்று அறிவித்தது. அந்த விருதுக்காக கொடுக்கப்படும் 10 லட்சம் ரூபாயை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாக சங்கரய்யா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண