தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,42,821 ஆக அதிகரித்துள்ளது. இன்று, வெளிநாட்டு விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 6 பயணிகளிடம் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும், சாலை மார்க்கமாக ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா நோய்த் தோற்று கண்டறியப்பட்டது.
முன்னதாக, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் இசை அமைக்கும் பணிக்காக லண்டன் சென்றிருந்த திரும்பிய நடிகர் வடிவேலுக்கு இன்று சென்னை விமான நிலையத்தில் உறுதி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. வடிவேலுவுக்கு ஒமிக்ரான் தொற்று அறிகுறியாக கருதப்படும் எஸ் ஜீன் டிராப் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்
குணமடைவோர் எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில் 681 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,99,309 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 98.3% குணமடைந்துள்ளனர்.
இறப்பு எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்று காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 36,714 ஆக அதிகரித்துள்ளது.
பாதிப்பின் தீவிரத்தன்மை என்ன? தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு சில தினங்களாக குறைந்து வருகிறது. இருப்பினும், மாநிலத்தின் மொத்த தினசரி தொற்று உறுதி விகிதம் (Daily positivity Rate) 3ம் குறைவாக 0.6 ஆக உள்ளது. அதாவது, பரிசோதிக்கப்படும் 100 கொரோனா மாதிரிகளில் குறைந்தது 1 பேருக்கும் குறைவானோருக்கு மட்டுமே கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,02,947 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 5 (5,67,25,248) கோடியாக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்குவங்கம், கர்நாடகா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார செயலாளர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இதில், மிசோரம், கேரளா ஆகிய மாநிலங்களின் சராசரி உறுதிப்படுத்துதல் விகிதம் தேசிய விகிதத்தை விட அதிகமாக உள்ளது” எனவும் தெரிவித்தார்.
ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அதிக அளவிலான புதிய பாதிப்புகளை தொடர்ந்து கண்டு வருகிறது. ஆனால், மறுபுறம் ஆசிய நாடுகளில் குறைவான புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. உலகின் ஒட்டுமொத்த உறுதிப்படுத்துதல் விகிதம் 6.1 சதவீதமாக உள்ளது, இந்தியாவை பொறுத்த வரையில் இந்த விகிதம் 5.3 சதவீதமாக உள்ளது என்று தெரிவித்தார். தமிழகத்தில் இது வெறும் 0.6 ஆக உள்ளது.
உலகம் நான்காவது பெருந்தொற்று அலையை சந்தித்து வருவதாக குறிப்பிட்ட அவர், நோய் தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை சிகிச்சைக்காக சந்தேகப்படும் நோயாளிகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு பரிசோதனைகளை விரிவுபடுத்தவும், கண்காணிப்பை உறுதிப்படுத்தவும் கோரிக்கை வைத்தார்.
ஒமிக்ரான் தொற்று:
நாட்டில் இதுவரை 358 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. இவர்களில் 144 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்ட்ராவில் 88 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், 42 பேர் குணமடைந்துள்ளனர். தில்லியில் 67 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்ட நிலையில், 23 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று பேர் குணமடைந்துள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்