கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,728 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 77 பேர் நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் அதிகபட்சமாக 4,567 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக செங்கல்பட்டு, திருவள்ளூர், கோயம்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. பெரம்பலூர், அரியலூர், நீலகிரி, கரூர் , தருமபுரி ஆகிய மாநிலங்களில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 100க்கும் குறைவாக உள்ளது.
இருப்பினும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கொரோனா இறப்பு விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா இறப்பு விகிதம் நோயின் தீவிரத்தை அறிந்து கொள்ள உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் எத்தனை பேர் மரணமடைகின்றனர் என்பதை இது கணக்கிடுகிறது.
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கும், இறப்பு எண்ணிக்கைக்குமுள்ள விகிதம் 1.9 ஆக உள்ளது. மதுரை, தென்காசி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் முறையே 1.8, 1.6, 1.6 ஆக உள்ளது. சென்னையில் இந்த விகிதம் 1.5 ஆக உள்ளது. எனவே, சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், கொரோனா நோய்த் தோற்று உறுதி செய்யப்பட்டவர்களில் இறப்பவர்கள் விகிதம் தென் மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. எனவே, தென் மாவட்டங்களில் ஆக்ஸிஜன் விநியோகம், உள்ளூர் அளவிலான கட்டுப்பாட்டு மண்டலங்கள் போன்ற கோவிட்- 19 நோய் தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது முக்கியமாகிறது.
ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சென்னையில் அதிகபட்சமாக 2,991 ஆக உள்ளது. செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்களில் முறையே 2,445, 2,232 ஆக உள்ளது.
தென் தமிழகத்தில் அநேக மாவட்டங்களில் தினசரி பாதிப்புகள் அதன் உச்சகட்ட பாதிப்பை கடந்து விட்டன. உதாரணமாக, முதல் கொரோனா பரவலில் தென்காசி மாவட்டத்தில் ஒருநாள் அதிகபட்ச பாதிப்பு 203 ஆக இருந்தது. இரண்டாவது அலையில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி 281 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட்டது.
தென்காசி மாவட்டம்- முதல் அலையின் உச்சகட்ட பாதிப்பை தற்போது கடந்து விட்டது
ராமநாதபுரம் மாவட்டம் -முதல் அலையின் உச்சகட்ட பாதிப்பை நெருங்குகிறது :
சிவகங்கை மாவட்டம் - இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது :
திருநெல்வேலி மாவட்டம்- முதல் அலையின் உச்சகட்ட பாதிப்பை தற்போது கடந்து விட்டது :
கன்னியாகுமரி மாவட்டம்- முதல் அலையின் உச்சகட்ட பாதிப்பை தற்போது கடந்து விட்டது :