தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 46,308. மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,02,71,805. இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 82,202. மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 9,40,145. இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 6,711. சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2105. மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 5,67,514 பேர். பெண்கள் 3,72,595 பேர். மூன்றாம் பாலினத்தவர் 35 பேர். தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 4036 பேர். பெண்கள் 2675 பேர்.




இன்று வீடு திரும்பியவர்கள் 2,339 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,80,910 பேர். இன்று கொரோனா தொற்றினால் 19 பேர் உயிரிழந்தனர். 11 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவராவார், 8 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,927 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 4,332 பேர் உயிரிழந்துள்ளனர்.


முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 18 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் ஒருவர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.