கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. ஊரடங்கு அறிவிப்பில் கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் 50 சதவீதம் வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பொங்கல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில், தற்போது அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. மேலும், அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.


இந்த நிலையில், பொங்கல் பண்டிகை என்றாலே ஜல்லிக்கட்டுதான் உலக தமிழர்கள் அனைவருக்கும் நினைவிற்கு வரும். தற்போது அதிகரித்து வரும் கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. தற்போது, ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க: ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகள் மட்டும்தான் அனுமதிக்கப்படும் - அமைச்சர் மூர்த்தி தகவல்..!


 






போட்டியில் பங்கேற்பவர்கள் மற்றும் பலர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்பவகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பன உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு விரைவில் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகள் மட்டும்தான் அனுமதிக்கப்படும் என அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளது, ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.


கடந்த மாதம் மதுரை மாவட்டம், ஊமச்சிக்குளம் அடுத்த வீரபாண்டியில் கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் மூர்த்தி, இந்தாண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் நாட்டு இன மாடுகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.  கலப்பின மாடுகள் டோக்கன் கொடுக்க மாட்டோம். தி.மு.க ஆட்சியில் ஜல்லிக்கட்டு முறையாக நடத்த அனுமதி பெற்று தரப்பட்டது. நாட்டு மாடு இனங்களை அதிகப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனக் கூறியிருந்தார். Pongal 2022 | புலிபோல பாயும் புலிக்குளம் காளை ; நாட்டின ஜல்லிக்கட்டு காளை சிறப்பு தெரியுமா !


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண