கவுன்சிலரை தாக்கியதாக கடந்த 2002 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 


கடந்த 2002 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்களை தாக்கியதாக மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. வி.எஸ்.பாபு, முன்னாள் உறுப்பினர்கள் தமிழ்வேந்தன் உள்பட 6 பேர் மீது இரு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. 


இந்நிலையில் குற்றச்சாட்டுகள் சரியாக நிரூபிக்கப்படவில்லை என கூறி வழக்கில் இருந்து மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 


22 ஆண்டுகளாக நீடித்த வழக்கில் 70க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.