தமிழ்நாட்டில், கொரோனா தொற்று தொடர்பான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது,

ஆக்சிஜன் சிலிண்டர்களை தயாராக வைத்திருக்க வேண்டும்,

தடுப்பூசி மையங்கள் முழுவீச்சில் செயல்பட வேண்டும்,

6 மாதத்துக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை முன்கூட்டியே வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கொரோனா வார்டுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Also Read: Brain Eating Amoeba: உலகை பயமுறுத்தும் புதிய நோய்; மூளையை உண்ணும் அமீபாவிற்கு தென்கொரியாவில் முதல் உயிரிழப்பு..!