நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் ஏற்பட்டு அதனால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. டெல்லி, தமிழ்நாடு, கர்நாடக போன்ற மாநிலங்களில் இந்த ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் தவித்து வருகின்றனர்.


இந்நிலையில், சென்னையில் உள்ள 5 மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைகளில் மொத்த 2323 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ள நிலையில் 2 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது.


 


கிங்ஸ் மருத்துவமனை


ஆக்சிஜன் படுக்கை- 1/198 


ஐ.சி.யுவில் உள்ள ஆக்சிஜன் படுக்கை - 0/102


சாதாரண படுக்கை - 21/ 250


 


கே.எம்.சி மருத்துவமனை


ஆக்சிஜன் படுக்கை - 0/170


ஐ.சி.யு ஆக்சிஜன் படுக்கை - 0/130


சாதாரண படுக்கை - 11/200


 


ராஜீவ் காந்தி மருத்துவமனை 


ஆக்சிஜன் படுக்கை - 0/845


ஐ.சி.யு ஆக்சிஜன் படுக்கை - 0/385


சாதாரண படுக்கை - 62/ 388


 


ஓமந்தூரார் மருத்துவமனை


ஆக்சிஜன் படுக்கை- 0/437


ஐ.சி.யு ஆக்சிஜன் படுக்கை - 0/190


சாதாரண படுக்கை - 12/100


 


ஸ்டான்லி மருத்துவமனை


ஆக்சிஜன் படுக்கை- 1/800


ஐ.சி.யு ஆக்சிஜன் படுக்கை - 0/150


சாதாரண படுக்கை - 51 / 1450


 


தமிழகம் முழுவதும்  33272 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ள நிலையில் 3335 படுக்கைகள் காலியான உள்ளன. 8325 ஐசியு படுக்கைகளில் 509 காலியா உள்ளன. 26536 சாதாரண படுக்கைகளில் 8022 படுக்கைகள் காலியாக உள்ளன.


அண்டை மாவட்டங்களில் படுக்கைகள் கிடைக்காமல் தவிக்கும் கொரோனா நோயாளிகள் சென்னை வருகின்றனர். இதனால், இங்கு ஆம்புலன்ஸ் வரிசை கட்டி நிற்கிறது. கோவை, கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியுள்ளன.  சேலம், தென்காசி, தேனி, திருப்பத்தூர், திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக இல்லை. கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம். தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே ஐசியு படுக்கைகள் உள்ளன.


முன்னதாக, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 13 நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜனை விநியோகிக்கும் பணி இன்று தொடங்கப்பட்டு, இந்த மருத்துவமனைக்கு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது.