திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸை செலுத்திக்கொண்டார். கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருவது கவலையளிக்கும் விதமாக உள்ளது. ஊரடங்கில் மீண்டும் கடுமையான கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ள அதேநேரத்தில், தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் வேகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 2.59 லட்சம், நேற்று 2.95 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 3.14 லட்சமாக உயர்ந்தது. நாட்டில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் மார்ச் 1-ஆம் தேதி முதல் 60 வயது மேற்பட்டோர், இணை நோயால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார். இதன்பின்னர், தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம் என்று ஸ்டாலின் கூறினார். இந்நிலையில், அதே மருத்துவமனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

இரண்டாவது டோஸ் #CovidVaccine இன்று எடுத்துக் கொண்டேன்.

இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும்!

நம்மையும் - நாட்டு மக்களையும் பாதுகாப்போம்! pic.twitter.com/SeWWQGtv50
— M.K.Stalin (@mkstalin) April 22, 2021

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி இன்று எடுத்துக் கொண்டேன். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும்! நம்மையும் - நாட்டு மக்களையும் பாதுகாப்போம்!” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, ஓய்வு எடுப்பதற்காக கடந்த 16-ஆம் தேதி தனது குடும்பத்தாருடன் கொடைக்கானல் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அங்கு 6 நாள்கள் தங்கி ஓய்வெடுத்த பின்பு நேற்று சென்னை வந்தார்.