தமிழ்நாட்டில் இன்று 1,24,177 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,127 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 146 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 15 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 1,358 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் 146 பேருக்கும், கோயம்புத்தூரில் 128 பேரும், செங்கல்பட்டில் 96 பேருக்கும், ஈரோட்டில் 70 பேருக்கும், திருப்பூரில் 78 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழப்பு. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1682 ஆக உள்ளது. மேலும் 51 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை சேலம் மாவட்டத்தில் 97,177 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99,466 ஆக உயர்வு. மாவட்டத்தில் 607 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று 54 பேர் பாதிப்பு. தொடர்ந்து ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா நோய் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்