தமிழ்நாட்டில் இன்று 1,23,701 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு  1,009 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 114   பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 14 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 1,183 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 






சென்னையில் 114 பேருக்கும், கோயம்புத்தூரில் 119 பேரும், செங்கல்பட்டில் 83 பேருக்கும், ஈரோட்டில் 75  பேருக்கும், திருப்பூரில் 68 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 






.சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழப்பு . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1685 ஆக உள்ளது. மேலும் 67 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை சேலம் மாவட்டத்தில் 97,619 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99,893 ஆக உயர்வு. 


கரூர் மாவட்டத்தில் புதிதாக 22 நபர்களுக்கு தொற்று பாதிப்பு. இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பதித்தவர்கள் 24,091 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று வீடு திரும்புவோர் 16 நபர்கள் ஆகும். கரூர் மாவட்டத்தில் இதுவரை வீடு திரும்புவோர் 23,523 நபர்கள் ஆகும்


திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம்வரை கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் அது கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது  இதுவரை மாவட்டத்தில் 54 ஆயிரத்து968 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 54 ஆயிரத்து 122 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 17 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா தொற்றால் இன்று உயிரிழப்பு இல்லை. இதுவரையில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் 667-ஆக உயர்ந்துள்ளது