வீட்டில் உள்ள அனைவரும் தினமும் 2 முறை நீராவி பிடித்து ஒட்டுமொத்த கொரோனாவை வீழ்த்த சபதம் எடுப்போம் போன்ற செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், நீராவி பிடிப்பது கொரோனா நோய்த்தொற்றை ஒழித்து விடும் என்பதற்கு எந்த எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  ஆவி பிடிப்பதால்  நாசித்துவாரத்தின் இந்த இயற்கை கட்டமைப்பு தகர்க்கப்படுவதாகவும், இதன் காரணமாக கொரோனா நோய்த் தோற்று அதிகரிக்கக் கூடும் என்று  உயிர் வேதியியல் துறையில் இணை பேராசிரியராக பணிபுரியும் நவீன் பிரபாகரன் தெரிவித்தார். 


இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர், " கேள்வி: ஆவி பிடித்தல் (steam inhalation) கொரணா வைரஸை கொன்றுவிடுமா?  பதில்: நிச்சயமாக இல்லை


நமது நாசித்துவாரத்தின் உட்புற கட்டமைப்பு, நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கண்ணுக்கு புலப்படாத திட பொருட்களை வடிகட்டும் தன்மைகொண்டது. 




சிறு முடி (cilia), பிசின் தன்மை கொண்ட திரவம் (mucus) இந்த இரெண்டும் அந்த வேலையை திறம்பட செய்ய வல்லது. 




 


ஆவி பிடிக்கும்பொழுது, நாசித்துவாரத்தின் இந்த இயற்கை கட்டமைப்பு தகர்க்கப்படுகிறது. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் நாசித்துவாரங்கள் சுத்தப்படுத்த பட்டு, காற்றில் இருக்கும் எல்லா திட நுண்பொருட்களும் நேரடியாக நுரையீரலுக்கு செல்லும். 


நாசித்துவாரத்தில் பிடி படவேண்டிய வைரஸை, நேரடியாக நுரையீரலுக்கு கொண்டு செல்லும் பணியை ஆவி பிடித்தல் செய்கிறது. ஆகவே தயவு செய்து ஆவி பிடிக்கும் வேலையை செய்ய வேண்டாம். சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார். இதேபோன்ற கருத்துக்களைத் தான் நோய்த் தொற்று நிபுணர்களும் முன்வைத்து வருகின்றனர். டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்திடம் அளித்த நேர்காணலில், " கடந்த மூன்று மாதங்களாக நாசித்துவாரத்தில் சேதம் ஏற்பட்டு மருத்துவர்களை அணுகும்  நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், ஆவி பிடித்தல் காரணமாக ஆஸ்துமா அறிகுறிகள் மோசமடைந்து வருவதாகவும்," பிரபல மருத்துவ நிபுணர் சத்ய நாராயண மைசூர் தெரிவித்தார்.    


மேலும், நீராவியில் யூகலிப்டஸ் எண்ணெய், வலி தைலம் ஆகியனவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இவை மூளையைத் தூண்டி விடுவதோடு, சிதைவு அறிகுறிகள் எற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. 


இதற்கிடையே, சேவாபாரதி என்ற அமைப்பு முன்னெடுத்து நடத்தும் கொரோனா நோய் தொற்றை தடுக்க நீராவி உபகரண மையம் மற்றும் நடமாடும் நீராவி வாகனத்தை கொரோனா நோய் தொற்றை தடுக்க நீராவி உபகரண மையம் மற்றும் நடமாடும் நீராவி வாகனத்தை துவங்கி வைத்தேன். கோவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார். 




இந்த திட்டத்ததை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், பாதுகாப்பற்ற முறையில் நீராவி பயன்படுத்தப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.