புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்காளர் அடையாள அட்டை காண்பித்து கூலி திரைப்படத்தின் டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாம் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சம்பத் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
வாக்காளர் அடையாள அட்டை காண்பித்தல் கூலி திரைப்படத்தின் டிக்கெட்
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள கூலி படத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், ஆமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சுருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள கூலி படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. தமிழ்நாட்டில் கூலி திரைப்படம் முதல் நாள் முதல் காட்சியாக இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட உள்ளது. கேரளா மற்றும் கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் முதல் நாள் முதல் காட்சி காலை 6 மணிக்கு தொடங்கியது. மும்பையில் 5 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அவர் ஆட்சியரிடம் அளித்த மனுவில், புதுச்சேரியில் இன்று பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தினை அனைத்து திரையரங்குகளும் திரையரங்குகளும் ஒரே நேரத்தில் வெளியிடுகின்றனர். ஆனால் டிக்கெட் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தினரால் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த இயக்கத்தினர் பொதுமக்களின் வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு இலவசமாக டிக்கெட் கொடுப்பதாக விளம்பரம் செய்து வருகின்றனர்.
இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல், வாக்காளர் அடையாள அட்டை என்பது தனி மனிதனின் முக்கியமான ஒரு ஆவணம். குறிப்பாக இளைஞர்களின் வாக்காளர் அடையாள அட்டையை வைத்துக்கொண்டு டிக்கெட் கொடுத்து அவர்களையும் அவர் குடும்பத்தினரையும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவே இதை கருத முடியும். வாக்காளர்களுக்கு, வாக்களிக்க பணம் கொடுப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொண்டு திரைப்பட டிக்கெட்டை கொடுப்பதை உடனடியாக அனைத்து திரையரங்களிலும் தடை செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
'கூலி'
'கூலி' படத்தின் கதை, கடத்தல்காரராக இருந்து ஓய்வுபெற்ற ஒருவர், பழங்கால தங்கக் கடிகாரங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்ட திருடப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது பழைய குழுவை மீண்டும் ஒன்றிணைப்பதைச் சுற்றி நகர்கிறது. இது பல பரபரப்பான சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
துபாயைச் சேர்ந்த உமைர் சந்து, 'கூலி' ஒரு "ஒன் மேன் ஷோ" திரைப்படம் என தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அவர், "கதை மற்றும் திரைக்கதை சுமாராகத்தான் உள்ளது என்றும், உபேந்திரா, நாகார்ஜுனா, அமீர்கான், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். கடைசி 20 நிமிடங்கள் மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகள் படத்தின் பலம் என்றும் பின்னணி இசை மற்றும் சண்டைக் காட்சிகள் அருமை. ஒரு சர்ப்ரைஸும் உள்ளது" என்றார்.