புதுச்சேரியில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. வெ.வைத்திலிங்கம் வலியுறுத்தினார்
புதுச்சேரியில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கு மத்திய அரசை மட்டும் நம்பாமல், பிற மாநிலங்களைப்போல வெளிநாடுகளிலிருந்தும் தடுப்பூசியை கொள்முதல் செலுத்துவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. வெ.வைத்திலிங்கம் வலியுறுத்தினார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது புதுச்சேரியில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக இரவு நேர ஊடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் தொற்று பாதிப்பு குறையாததால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது,
கொரோனா தொற்றை தடுத்து நிறுத்துவதற்கான ஒரே வழி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதுதான். முதியோர், நடுத்தர மக்கள், சிறுவா்கள் என மூன்று பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 18 வயது முதல் 45 வயதுள்ளவா்களுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை. இவா்களில் 500 பேருக்கே தினசரி தடுப்பூசி கிடைக்கிறது. புதுச்சேரியில் இந்த நடுத்தரபிரிவினா் 6 லட்சம் போ் உள்ளனா். அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க ஆண்டுக்கணக்காகும். இப்பிரிவினா்தான் குடும்பத்துக்கு பொருளீட்டும் முக்கிய நபா்கள். இவா்கள் மூலம் வீட்டிலுள்ளவா்களுக்கும் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. மத்திய அரசை மட்டும் நம்பாமல், பிற மாநிலங்களைப்போல வெளிநாடுகளிலும் கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை புதுவை அரசு மேற்கொள்ள வேண்டும். புதுச்சேரியில் கடந்த மாதத்தில் மிக அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசியும், உயிர்காக்கும் மருந்துகள் பற்றாக்குறையும்தான் மிகுந்த தொற்றுக்கு காரணம். புதுச்சேரியில் ஆக்சிஜன் திட்டத்துக்காக எனது நாடாளுமன்ற உறுப்பினா் நிதியிலிருந்து ரூ.10 லட்சத்துக்கு அனுமதி வழங்கும் கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துள்ளதாகவும்,
அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கொண்டு வரும் வாகனம் வாங்கவும் நாடாளுமன்ற உறுப்பினா் நிதியிலிருந்து நிதி வழங்கியுள்ளேன். எனது ஊதியத்திலிருந்து ரூ.6.8 லட்சத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார். பிரதமரின் நிவாரண நிதி மட்டுமல்ல, மத்திய அரசின் கொரோனா தடுப்பூசியும் எங்கு செல்கிறது என்பது தெரியவில்லை. புதுவையில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதால், இது குறித்து பாஜக எம்எல்ஏக்கள் மத்திய அரசிடம் தெரிவித்து, தடுப்பூசியை கொண்டுவந்து அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது. என்.ஆா். காங்கிரஸையும் பாஜக எதிர்க்கட்சியாகத்தான் பார்க்கிறது என்றார் வெ.வைத்திலிங்கம்.
இன்றைய நிலவரப்படி புதுச்சேரி மாநிலத்தில் 9450 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 530 பேருக்கும், காரைக்காலில் 121 பேருக்கும், ஏனாமில் 36 பேருக்கும், மாஹேவில் 25 பேருக்கும் என மொத்தம் 712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,07,826-ஆக அதிகரித்தது. இதனிடையில் புதுச்சேரியில் 15 பேரும், காரைக்காலில் 2 பேருக்கும், ஏனாமில் 1ஒருவர் உயிரிழந்த்துள்ளனர், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1601 ஆக உயா்ந்தது. இந்த நிலையில், 1215 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 96.731 ஆக அதிகரித்தது. மாநிலத்தில் தற்போது ஜிப்மரில் 462 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 323 பேரும், கொரோனா சிகிச்சை மையங்களில் 296 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 8,126 பேரும் என மொத்தம் 9498 போ் சிகிச்சையில் உள்ளனா் என சுகாதாரத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெ.வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.