அனுமதியின்றி லாரியில் கடத்திய சுண்ணாம்புக்கல் பறிமுதல்;


கரூர் - திருச்சி பைபாஸ் சாலையோரம் அனுமதி இன்றி லாரியில் கடத்திவரப்பட்ட சுண்ணாம்புக்கல்லை போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கரூர் - திருச்சி பைபாஸ் சாலையில் சுண்ணாம்பு கல்லோடு லாரி ஒன்று நிற்பதாக கனிமவளத்துறை அதிகாரி இளங்கோவன், தான்தோன்றி மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், கரூர் - திருச்சி பைபாஸ் சாலையை ஒட்டியுள்ள வெங்ககல்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த  லாரியை போலீசார் சோதனையிட்டபோது, லாரியில் அனுமதி இன்றி கொண்டுவரப்பட்ட 25 டன் எடையுள்ள சுண்ணாம்புக்கல் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து லாரி மற்றும் சுண்ணாம்பு கல்லை பறிமுதல் செய்த போலீசார், லாரியில் இருந்து தப்பி ஓடிய லாரி டிரைவர் மற்றும் உரிமையாளர் ஆகிய இருவரையும் தேடி வருகின்றன. 





    
பெண் தூக்குபோட்டு தற்கொலை:- 


 




 


வேலாயுதம்பாளையம்: புன்னம் சத்திரம் அருகே பெருமாள் நகரை சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது வயது 36 சமீபத்தில் கணவர் இருந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்கு மாட்டி தொங்கினார். அதை கண்ட அவரது மகன் ஹரி பிரகாஷ்(18) அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து மஞ்சுளாவை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் எஸ்ஐ பெரியசாமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். 




பைக்குகள் மோதல் மூன்று பேர் காயம்:-


 வேலாயுதம்பாளையம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கருக்கம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் வயது 26. இவரது மனைவி ரோஸி வயது 20. மகள் மித்ரா வயது 3. இவர்கள் மூன்று பேரும் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அய்யம்பாளையம் வாய்க்கால் அருகே காட்டூர் நவீன் ஓட்டி வந்த பைக் மோதியது. இதில் கார்த்திக், ரோஸி, மித்ரா ஆகியோர் காயமடைந்தனர். கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கார்த்திக் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வேலாயுதம்பாளையம் சிறப்பு எஸ்ஐ ரங்கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.                                                                       
                                                                                                                    


 


கரூரில் கடையில் குட்கா விற்றவர் கைது;


குளித்தலை அடுத்த நெய்தலூர் காலனி தெற்கு பகுதி சேர்ந்தவர், பொன்னுசாமி. இவர் வயது 47. சின்னப்பனையூரில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குளித்தலை போலீசார் கடையில் ஆய்வு நடத்திய ஒரு கிலோ எடையுள்ள குட்கா மற்றும் ரூ. 250 ஐ கைப்பற்றினர். பொன்னுசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.