புழல் சிறையில் இருந்த இன்று வெளியே வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘அராஜக ஸ்டாலின்’ என்று கோஷமிட்டபடி தொண்டர்கள் படை சூழ வந்தார்.


பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து சிறையில் இருந்து இன்று வெளியே வந்தார் ஜெயக்குமார். சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயக்குமாருக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.


சிறையில் அவர் வெளியேறிய உடனேயே, அதிமுகவினர் அவரை தோளில் சுமந்து கொண்டு வந்தனர். அப்போது,  ‘அராஜக ஸ்டாலின்’ என்று கோஷமிட்டபடி ஜெயக்குமார் வந்தார். புரட்சி தலைவர் வாழ்க, புரட்சி தலைவி வாழ்க என்றும் கூறினார். தொண்டர்கள் படை சூழ வந்த ஜெயக்குமார் வந்ததால், சிறிது நேரம் அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது. இதனால், நெற்குன்றம் சாலையிலும் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.


அதிமுகவை அழிக்க பொய் வழக்கு போடுகின்றனர் என்று ஜெயிலில் இருந்து வெளியே வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “அதிமுகவை அழிப்பதற்காக தமிழ்நாடு அரசு பொய் வழக்கு போடுகிறது. நகர்ப்புற தேர்தலில் கள்ள ஓட்டை தடுக்க முயன்ற என் மீதும் பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர்" என்று கூறினார்.


ஜெயக்குமார், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில் இரண்டு வாரம் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திடுகிறார்.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண