தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இணையவழியில் புகார் தெரிவிக்க பல்வேறு சிரமங்கள் உள்ளதால் புகார் பதிவேடு முறையை கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் அவற்றில் உள்ள சிரமங்களை இணையவழியில் தெரிவிப்பதில் சிரமங்கள் உள்ளதாக ஆய்வுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நியாய விலைக்கடைகளில் புகார் பதிவேடு முறை அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள இணைய வழி புகார் தெரிவிக்கும் நடைமுறையும் அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த புகார் பதிவேட்டு முறையை உடனடியாக அமல்படுத்த நுகர்பொருள் வழங்கல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த புகார் பதிவேடு முறையால் புகாரை உடனே தெரிவிக்கவும், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேட்டு முறையை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவு
சுகுமாறன் | 10 Jul 2021 11:37 AM (IST)
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைளிலும் புகார் பதிவேட்டு முறை அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நியாயவிலைக்கடை