பெண் அடிமைத்தனத்தை உடைத்தது  திராவிட இயக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற பெயரில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி  மாபெரும்  மாநாடு பல்லடத்தில் நடைபெற்றது.

இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திரண்டுள்ள மகளிரணியை பார்க்கும் போதே ஃபவர்புல்லாக இருக்கிறது. எப்போதுமே திமுக தேர்தல் அறிக்கைதான் ஹீரோ. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியை பெறப்போகிறோம். பகுத்தறிவுச் சுடரை கையில் ஏந்தி தமிழ்நாடு நடை போடுகிறது. பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பாக ஒட்டுமொத்த இந்திய மகளிரி குரலாக கனிமொழி உரையாற்றினார். நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதை பாஜக விரும்பவில்லை. மகளிர் பவரால் திமுக மீண்டும் பவருக்கு வருவது உறுதியாகி உள்ளது. திரண்டுள்ள மகளிரணியை பார்க்கும் போதே ஃப்வர் புல்லாக இருக்கிறது. மேற்கு மண்டல திமுக மகளிரணி மாநாட்டில் கூடியுள்ள மகளிரை பார்க்கும்போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதியாகியுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் வேலைக்கு செல்லும் பெண்களின் சதவிகிதம் 47% உள்ளது. தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் பெண்கள் அதிகம். 

Continues below advertisement

சங்கி கூட்டத்துக்கு பத்து நாள் தூக்கம் வராது

திமுக இளைஞரணி மாநாட்டை கண்டு சங்கி கூட்டம் பத்து நாட்கள் புலம்பிக் கொண்டே இருந்தது. தாய்மொழியில் பேசும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் வேறு மொழியில் பேசுமாறு உங்களால் கேட்க முடியுமா என்று கேட்டார் மெகபூபா. காஷ்மீரில் இருப்பவர்களுக்கு கூட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர்தான் முதலில் ஞாபத்துக்கு வரும். எனது தாயார் போல் வந்துள்ளீர்கள், எனது சகோதரிகள் போல் பலர் வந்துள்ளீர்கள் எனது மகள்கள் போல் பலர் வந்துள்ளீர்கள். திட்டத்தின் பெயரில் உரிமையை கொண்டு வந்து புரட்சி செய்தோம்; திட்டமும் வெற்றி பெற்றுள்ளது. மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.30 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 கொடுக்கிறோம். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மகளிருக்கும் இதுவரை தலா ரூ.28,000 கொடுத்துள்ளோம். நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் விடியல் பயணத் திட்டத்தில்தான் கையெழுத்திட்டேன். விடியல் பயணத் திட்டதால் மகளிருக்கு கூடுதலாக மாதம் ரூ. ஆயிரம் மிச்சமாகிறது. திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி. கடந்த 4 ஆண்டுகளில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பயனடைந்தவர்களில் 88% பேர் பெண்கள்தான். பாஜகவின் நடவடிக்கை பெண்களுக்கு முற்றிலும் விரோதமானது; அதற்கு ஆதரவாக உள்ளது. இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.