முதலமைச்சர் முக ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அண்மையில் தனது 63வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு முதலமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்தான் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அண்மையில் கலைஞர் அரங்கத்தில் நிகழ்ந்த துர்கா ஸ்டாலின் அண்ணன் மகன் திருமணத்தில் தலைமையேற்றுக் கலந்து கொண்ட ஸ்டாலின் மேடையிலேயே தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்து அன்பைப் பரிமாறிக்கொண்டது அனைவரையும் பேரின்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


துர்கா ஸ்டாலின் அண்ணன் மகன் கருணாரத்தினத்தின் திருமணம் அன்மையில் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. மேடையில் மணமக்களை வாழ்த்திப் பேசிய முக ஸ்டாலின் ‘முதலில் எனது துணைவியாருக்கு அவரது 63வது பிறந்தநாளில் மனமார்ந்த வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்கிறேன். ஏற்கெனவே நள்ளிரவு 12 மணிக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டாலும் மீண்டும் ஒருமுறை இங்கே எனது வாழ்த்தைப் பகிர்ந்துகொள்கிறேன். எல்லோரும் மேடையில் என் துணைவிக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது அவர்களுடன் எனது மகிழ்ச்சியை நானும் பகிர்ந்துகொள்கிறேன்’ என்றார். 


கருணாரத்தினம். திருவாவடுதுறை எஸ்.ஏ.ராஜரத்தினம் பிள்ளையின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. நாதஸ்வரக் கலைஞர் ராஜரத்தினம் பிள்ளை பற்றிய சுவாரஸ்யத் தகவல்களையும் முதலமைச்சர் மேடையில் பகிர்ந்துகொண்டார்.