பொண்டாட்டி சொன்னால் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று ருசிகரமான ஆலோசனையை முதல்வர் ஸ்டாலின் மணமகன்களுக்கு வழங்கியது சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

Continues below advertisement

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பேரறிஞர் அண்ணா பெயரிலான திருமண மண்டபத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். திருமண மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அண்ணாவின் சிலையையும் திறந்து வைத்து, திருமண மண்டபத்தை பார்வையிட்டார். தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:

’’கொளத்தூர் என்ற பெயர் சொன்னாலே அது சாதனை அல்லது ஸ்டாலின் என்று நியாபகம் பெரும் அளவுக்கு தொகுதியுடன் கலந்துள்ளேன். ஏராளமான திட்டங்களை இந்த தொகுதிக்கு வழங்கியுள்ளேன். எல்லாருக்கும் எல்லாம் என்பதை முன்வைத்து பணியாற்றி வருகிறோம்.

Continues below advertisement

சேகர் பாபு விட மாட்டார்

முதல்வர் கொளத்தூர் தொகுதிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கிறார், மற்ற தொகுதிகளை விட்டுவிட்டார் என என்ன வேண்டாம். எல்லா தொகுதியும் நம்ம தொகுதிதான். கொளத்தூர் தொகுதிக்கு பத்து நாளைக்கு ஒரு முறை வந்துவிடுகிறேன். வரவில்லை என்றால் சேகர் பாபு விட மாட்டார். ஒரு பட்டியலுடன் வந்துவிடுவார்.

பத்து நாளைக்கு ஒரு முறை கொளத்தூர் தொகுதிக்கு வந்தால்தான் முழு திருப்தி கிடைக்கிறது. மற்ற தொகுதிகளுக்கு செல்லும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை விட கொளத்தூர் தொகுதி மக்கள் கொடுக்கும் வரவேற்பு மிக மகிழ்ச்சி தருகிறது. தொகுதியை பொறுத்தவரை எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளையாக செல்ல பிள்ளையாக நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும். அப்படிதான் இருக்கிறேன் என நான் நம்புகிறேன்.

மக்கள் மனதில் பேசும் அளவுக்கு திட்டங்கள்

திமுக அரசின் திட்டங்கள் எப்போதும் மக்கள் மனதில் பேசும் அளவுக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள அரசு பெரியார் மருத்துவமனை மேம்படுத்தப்பட்டுள்ளது. வண்ண மீன் அங்காடி அமைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு திட்டங்கள் கொளத்தூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன

கொளத்தூருக்கு ஒரு சிறப்பு உள்ளது. கொளத்தூரில்தான் மாநகராட்சி பள்ளிகள் அதிகம். மருத்துவமனை, நூலகம், இப்படி எதை எடுத்துக்கொண்டாலும் கொளத்தூரில்தான் அதிகம். திமுக ஆட்சியில் பெண்களுக்குதான் அதிக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

என்னுடைய வெற்றிக்கு பின்னாலும் என் மனைவிதான்

பெண்கள் நினைத்தால் எதையும் செய்ய கூடியவர்கள். அதனால்தான் அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண்தான் உள்ளார். என்னுடைய வெற்றிக்கு பின்னாலும் என் மனைவிதான் உள்ளார்.

பொண்டாட்டி சொன்னால் கேட்டுக்கொள்ள வேண்டும்

மிசா கைதியாக சிறையில் இருந்த போது எவ்வளவோ கொடுமைகள் அனுபவித்தேன். அப்போது எனக்கு உறுதுணையாக இருந்தது என் மனைவிதான். பொண்டாட்டி சொன்னால் கேட்டுக்கொள்ள வேண்டும்’’.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.