தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைக்க காவல்துறை, மருத்துவத்துறை, மின்துறை, தூய்மைப் பணியாளர்களுக்கு தலை வணங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


இதுகுறித்து முதலைமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தொடர் மழை - அளவுக்கதிகமான நீர்வரத்து காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது துயர்துடைக்கப் பணியாற்றும் காவல்துறையினர், மின்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவத்துறையினர் உள்ளிட்ட நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரது சேவைக்கும் தலைவணங்குகிறேன். தன்னலம் பாராத உங்களது சேவையாலும் தியாகத்தாலும் கோடிக்கணக்கான மக்களின் துயர் துடைக்கப்படுகிறது. இயல்பு நிலை முழுமையாக விரைந்து திரும்ப அனைவரும் சேர்ந்து உழைப்போம். மக்களைக் காப்போம். உங்கள் தியாகம் விலைமதிப்பில்லாதது! உங்கள் சேவை மகத்தானது! உங்கள் உள்ளத்துக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார். 


 


சென்னையில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து ஆறாவது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.


 






 










மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண