கொரோனா காலகட்டத்தில் பல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்து வருகிறார் இந்நிலையில் முகாம்களுக்கு வெளியே வாழும் இலங்கை தமிழர்களுக்கான நிவாரண திட்டத்தை அவர் தொடங்கிவைத்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் 'தமிழ்நாட்டில் முகாம்களுக்கு வெளியே வாழும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக, தலா ரூ.4000 வழங்கும் திட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 






அதேபோல அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்குப் பாடநூல்களை வழங்கி அவர்களுடன் உரையாடினார் முதல்வர் ஸ்டாலின். அவர்கள் வீட்டிலிருந்தபடியே பயில ஏதுவாக கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் அவர் தொடங்கிவைத்தார். 'கற்பித்தல் - மாணவச்செல்வங்களின் மனநலன் பேணல் என இரண்டிலும் இந்த அரசு அக்கறை கொண்டுள்ளது' என்றும் அவர் அந்த நிகழ்ச்சியில் கூறினார்.


Cement Prices in Tamil Nadu: தமிழ்நாட்டில் மட்டும் சிமெண்ட் விலை உயரும் மர்மம் என்ன? - டாக்டர் ராமதாஸ்


தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார் மு.க.ஸ்டாலின். நீட் ரத்து, புதிய கல்விக்கொள்கையைத் திரும்பப் பெறுதல், இடஒதுக்கீட்டில் மாநிலத்துக்கான முழு உரிமை என பிரதமர் மோடியிடம் அவர் கோரிக்கைகளை முன் வைத்தார்.