சென்னை எழும்பூரில் புனரமைக்கப்பட்ட ஹாச்சி ஆடுகளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம், ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர்  மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.




7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை ஆக்ஸ்ட் 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


’தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்' என்ற திருக்குறளுடன் ஹாக்கி விளையாடும் சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


7-வது 'ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை - 2023 போட்டி ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் நடைபெறுகின்ற இப்பேட்டியை ஹாக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்த உள்ளது. இப்போட்டியில் இந்தியா சீனா பாகிஸ்தான், மலேசிய ஜப்பான், மற்றும் தென் கொரிய ஆகிய 45 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன.


மேலும், சர்வதேச அளவியான இப்போட்டியினை சிறப்பாக நடத்தும் வகையில், 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தரத்திலான முதன்மை ஹாக்கி செயற்கை இழை ஆடுகளம். வீரர்கள் பயற்சி செய்வதற்கான செயற்கை இழை ஆடுகளம் மற்றும் இணைப்பு பணிகள் உள்ளிட்ட பல மேற்கொள்ளப்பட்டுள்ளன.


முன்னதாக,  ஆடவர் ஹாக்கி கோப்பை - 2023" போட்டியின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சிலையை தமிழ்நாடு முதலமைச்சர்  திறந்து வைந்தார்.