தஞ்சாவூர் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளங்கோவன் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் - மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
தஞ்சாவூர் அருகே மேலவெளி கிராமம், பரிசுத்தம் நகரைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் கடந்த 3-ஆம் தேதி பள்ளியேறி கிராமத்திலுள்ள தனியாருக்கு சொந்தமான வயல் வழியாக சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்கம்பி மூலம் மின்சார தாக்கி உயிரிழந்தார்.
இளங்கோ நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். அவர் பணி முடித்து வயலுக்குச் சென்று தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். இளங்கோ அங்கு மின் கம்பி அறுந்து கிடப்பது தெரியாமல் அதை மிதித்துவிட்டார். இதில் மின்சாரம் தாக்கி இளங்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முதலமைச்சர் இரங்கல் மற்றும் நிதியுதவி
இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதோடு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க..
கோவை அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குட்டி யானை உயிரிழப்பு ; தொடரும் சோகம்!