மயிலாடுதுறையில் முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கினை பொதுமக்கள் கடைபிடிக்கவில்லை. போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் இருசக்கர வாகனத்தில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு. கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறையில் இன்று காலை முதலே வாகனத்தில் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. மக்கள் முழு ஊரடங்கை கடைபிடிக்காமல் சாலைகளில் தேவையின்றி இருசக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர். 



மயிலாடுதுறையில் முழு ஊரடங்கை கடைபிடிக்காத பொதுமக்கள்!


 


மேலும், மயிலாடுதுறையில் கச்சேரி சாலை, சின்னக்கடை தெரு, மணிக்கூண்டு, ரயிலடி, கூறைநாடு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பில் இல்லாததால் பொதுமக்கள் போலீஸ் மற்றும் கொரோனா அச்சமின்றி சுற்றித் திரிகின்றனர். 



மயிலாடுதுறையில் முழு ஊரடங்கை கடைபிடிக்காத பொதுமக்கள்!


போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களின் நடமாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.