தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வெப்பம் வாட்டி வதக்கிய நிலையில், இரண்டு வாரங்களாக வெயிலும், மழையும் சுத்தவிட்டு கொண்டு இருக்கிறது. 


இந்தசூழலில், சென்னையில் பெரும்பாலான இடங்களில் அடிக்கடி மின்வெட்டு பிரச்சினை ஏற்படுவதாக சமூக வலைத்தளங்களில் புகார் எழுந்து வருகிறது. இதையடுத்து, பலரும் தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து கேள்வி எழுப்பி வந்தனர். 






அந்தவகையில், பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தங்கள்து ஏரியாவில் மின்வெட்டு பிரச்சினை ஏற்படுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து போஸ்ட் ஒன்றைய பதிவிட்டு இருந்தார். அதில், “ சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டை பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. என்ன நடக்கிறது..?” என கேள்வி எழுப்பினார். 






இதையடுத்து பி.சி.ஸ்ரீராமுவின் கேள்விக்கு மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். அதில், “ மின்வெட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி சரி செய்ய அறிவுறுத்தியுள்ளேன். சென்னை முழுவதும் பணிகள் நடந்து வருவதால் மின் விநியோகத்தில் சிறிய இடையூறு ஏற்பட்டுள்ளது. “ என தெரிவித்தார்.