இந்தியாவிற்கான சீனாவின் தூதர் சன் வெய்டாங் சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் சிப்காட் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேலும் தமிழ்நாடு அரசின் தொழில்துறை சார்பாக சில நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்றார்.
இந்நிலையில் தன்னுடைய தமிழ்நாடு பயணம் தொடர்பாக ஒரு ட்விட்டர் பதிவை செய்துள்ளார். அதில், “நான் விமானத்திலிருந்து இறங்கியுடன் தமிழ்நாட்டின் வெப்பத்தை என்னால் உணர முடிந்தது. அங்கு இருக்கும் மக்கள் மற்றும் தொழிற் பூங்கா மிகவும் அற்புதமாக அமைந்திருந்தது. தமிழ்நாடு-சீனா இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் என்னுடைய இந்தப் பயணம் இருந்தது” எனப் பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே கடந்த 2019ஆம் ஆண்டு சீன அதிபர் ஸி ஜிங்பிங் மகாபலிபுரம் வந்தார். அப்போது அவர் அங்கு பிரதமர் மோடியுடன் சந்தித்து பேசினார். தமிழ்நாடு மற்றும் சீனாவிற்கு சங்க காலங்கள் முதல் உறவு நீடித்து வந்தது.
தமிழ்நாடு-சீனா:
இந்தியாவில் ஆட்சி செய்து வந்த குப்தா மன்னர்களின் மறைவிற்கு தமிழ்நாடு பகுதியில் பல்லவ மன்னர்கள் ஆட்சி செய்ய தொடங்கினர். அவர்கள் கி.மு 3வது நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தனர். பல்லவ மன்னர்களின் ஆட்சி காலத்தில் கி.மு.650 முதல் 750 சிறப்பான காலமாக அமைந்தது. பல்லவ மன்னர் நரசிம்மவர்மன்-I ஆட்சி காலத்தில் பல முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்றன.
அவருடைய ஆட்சி காலத்தில் தமிழ்நாடு மற்றும் சீனா இடையே வர்த்தக ரீதியிலான உறவு இருந்து வந்தது. அதற்கு சான்றாக மாமல்லபுரத்தில் சீனா நாட்டில் அப்போது இருந்த காசுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் போதி தர்மர் மாமல்லபுரத்தில் கிமு 576 ஆண்டில் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. நர்சிம்மவர்மன்-II மன்னர் தன்னுடைய ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து சீனாவிற்கு தூதரை அனுப்பியிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சீன பயணி தான்சன் பௌத்த மதம் தொடர்பான தன்னுடைய புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்