கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம் தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ் பாரம்பரிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் டயர் வண்டி பந்தயம், பம்பரம் விடுதல், பாண்டியாடுதல், கோ-கோ போன்ற விளையாட்டுகளும், பந்து சேகரித்தல், பலூன் சேகரித்தல் என்று குழந்தைகளை கொண்டாடும் தினமாக ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தில் மகிழ்ச்சியான விளையாட்டுகள் மூலம் சிறப்புடன் விளையாடி மகிழ்ந்தனர்.




 


இங்கு 94 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். குழந்தைகளை கொண்டாடும் இந்நாளில் குழந்தைகளின் வாழ்க்கையோடு நடைபெறும் விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். பள்ளியின் தலைமையாசிரியர் மூர்த்தி வாழ்த்து தெரிவித்து மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட்டு திடலில் விளையாட வேண்டும் என்றும், செல்போன்களில் விளையாட கூடாது என்றும் தமிழக அரசின் உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.




 


குழந்தைகள் உதவி மையம் சார்பாக ராமசாமி செட்டியார் அரசு உயர்நிலைப்பள்ளி குழந்தைகள் வார தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.


இந்த விழாவில் பள்ளி சார்பாக ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். மேலும் குழந்தைகள் உதவி மையம் சார்பாக குழந்தைகள் பாரம்பரிய விளையாட்டுகளுடன்


குழந்தைகள் உரிமைகள் 1. வாழ்வு உரிமை 2. வளர்ச்சிக்கான உரிமை 3.பங்கேர்புக்கான உரிமை 4. பாதுகாப்புகனா உரிமை பற்றி மாணவரிடையே கேட்டு உரையாடப்பட்டது. மேலும் மாணவ மாணவிகள் தங்களது பாரம்பரிய விளையாட்டான கொக்கோ, கபடி, நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், உள்ளிட்ட விளையாட்டுகளை மாணவர்கள் விளையாட அவர்களுடன் குழந்தைகள் உதவி மைய உதவியாளர்களும் விளையாடி மகிழ்ந்தனர். 




 


பின்னர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி குழந்தைகள் தின விழா கொண்டாட்டத்தை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட குழந்தைகள் உதவி மைய சார்பாக பணியாளர் சசிகலா, தரணி ராஜேஷ்குமார் மற்றும் கரூர்,வாங்கல், அரசு பள்ளி தலைமை ஆசிரியர், வாங்கப்பாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், புலியூர் கவுண்டம்பாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இருபால் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்றின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு பல்வேறு பள்ளிகளில்  குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக அரசு பள்ளிகளில் இந்த விழா மிகவும் வித்தியாசமான முறையில் மாணவ, மாணவிகள் எழுச்சியுடன் கொண்டாடினர்.