கொரோனா காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 511 பள்ளி மாணவிகளுக்கு குழந்தைத் திருமணம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவியர் 37 பேருக்கும், 10-ம் வகுப்பு மாணவியர் 45 பேருக்கும், 11-ம் வகுப்பு மாணவியர் 417 பேருக்கும், 12-ம் வகுப்பு மாணவியர் 2 பேருக்கும் என்று 511 பேருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. 


மேலும் பதிமூன்று வயதைக் கடந்த எட்டாம் வகுப்பு மாணவிகள் 10 பேருக்கும் குழந்தை திருமணங்கள் நடத்தப்பட்டிருந்தது பள்ளிக் கல்வித்துறையின் ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்களின் படிப்பு பாதிக்காமல் இருக்க மாணவிகள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


அண்மையில் 0-18 வயது வரையுள்ள மாற்றுத்திறனுடைய மாணவ / மாணவியர்கள்‌ மற்றும் 6-18 வயது வரையுள்ள இடை நின்ற மாற்றுத்‌ திறன்‌ மாணவ மாணவியர்கள்‌, புலம்‌ பெயர்த்‌ தொழிலாளர்களின்‌ குழந்தைகளைக் கண்டறிந்து, பதிவேடுகளைப் புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. 


அதேபோல பள்ளி செல்லாக் குழந்தைகளை, வீடு வீடாகச் சென்று நேரடியாகக் கண்டறிந்து உடனடியாகச் சேர்க்கையை நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறிப்பாக, அங்கன்வாடியில்‌ பயிலும்‌ குழந்தைகளில்‌ 5 வயதுடைய குழந்தைகளைக்‌ கண்டறிந்து அவர்களை அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌.


பள்ளி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில்‌ உள்ள அனைத்து 5 வயதுடைய குழந்தைகளைக்‌ கண்டறிந்து அவர்களை அரசுப்‌பள்ளிகளில்‌ சேர்க்க வீடுதோறும்‌ நேரடியாகச் சென்று உடனடி சேர்க்கையை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌. இடைநின்ற மாணவர்களைக்‌ கண்டறிந்து அவர்களை அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி அறிவுறுத்தி இருந்தார்.




இந்த சூழலில் பள்ளிக் கல்வித்துறையில் இருந்து ஆசிரியர்கள் வீடுகளுக்குச் சென்று இடைநிற்ற குழந்தைகள் குறித்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஏராளமான பெண் குழந்தைகளுக்கு கொரோனா காலத்தில் திருமணம் செய்திருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 9-ம் வகுப்பு மாணவியர் 37 பேருக்கும், 10-ம் வகுப்பு மாணவியர் 45 பேருக்கும், 11-ம் வகுப்பு மாணவியர் 417 பேருக்கும், 12-ம் வகுப்பு மாணவியர் 2 பேருக்கும் என்று மொத்தம் 511 பேருக்குக் குழந்தைத் திருமணம் நடைபெற்றுள்ளது. 


மேலும் பதிமூன்று வயதைக் கடந்த எட்டாம் வகுப்பு மாணவிகள் 10 பேருக்கும் குழந்தை திருமணங்கள் நடத்தப்பட்டிருந்தது பள்ளிக் கல்வித்துறையின் ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்களின் படிப்பு பாதிக்காமல் இருக்க மாணவிகள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண